#IPL2021Auction இதெல்லாம் பெரிய கொடுமைங்க..! எவ்வளவு நல்ல பிளேயர்; அவருக்கு போய் இந்த நிலைமை

First Published Feb 21, 2021, 2:34 PM IST

அனுபவமே இல்லாத வெளிநாட்டு ஃபாஸ்ட் பவுலர்களெல்லாம் கோடிகளில் விலை போன நிலையில், அனுபவம் வாய்ந்த சீனியர் ஃபாஸ்ட் பவுலரான உமேஷ் யாதவ் வெறும் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போனதை தன்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை என்று முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் நேற்று சென்னையில் நடந்தது. முழுக்க முழுக்க ஃபாஸ்ட் பவுலர்களுக்கான ஏலமாக இது இருந்தது. ஃபாஸ்ட் பவுலர்களுக்கு கிராக்கி அதிகமாக இருந்ததால், கிறிஸ் மோரிஸ்(ரூ.16.25 கோடி), கைல் ஜாமிசன்(ரூ.15 கோடி), ஜெய் ரிச்சர்ட்ஸன்(ரூ.14 கோடி), மெரிடித்(ரூ.8 கோடி) ஆகியோர் அதிக விலைக்கு ஏலம்போனார்கள்.
undefined
வெளிநாட்டு ஃபாஸ்ட் பவுலர்களுக்கு அதிக கிராக்கி இருந்த நிலையில், உள்நாட்டு ஃபாஸ்ட் பவுலரான உமேஷ் யாதவ் வெறும் ஒரு கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். 121 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 119 விக்கெட்டுகளை வீழ்த்திய நல்ல அனுபவம் வாய்ந்த பவுலர் உமேஷ் யாதவ். ஐபிஎல்லில் மட்டுமல்லாது, சர்வதேச கிரிக்கெட்டிலும் 48 டெஸ்ட், 75 ஒருநாள் போட்டிகளில் ஆடி முறையே 148 மற்றும் 106 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் நிறைய ஆடியிருந்தாலும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெறும் 7 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார் உமேஷ் யாதவ்.
undefined
140 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடிய அனுபவம் வாய்ந்த பவுலராக இருந்தும் கூட, உமேஷ் யாதவை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. அதனால் ரூ.1 கோடி என்ற அவரது அடிப்படை விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இதுகுறித்த வருத்தத்தையும், இது தனக்கு அதிர்ச்சியாக இருந்ததாகவும் கம்பீர் தெரிவித்திருந்தார்.
undefined
இந்நிலையில், ஆஷிஸ் நெஹ்ராவும் அதேபோல வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸிற்கு பேசிய நெஹ்ரா, ஜெய் ரிச்சர்ட்ஸன் பெர்த்தில் நன்றாக வீசியிருக்கிறார். ஜாமிசன் நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாக ஆடியிருக்கிறார். அவர்கள் எல்லாம் அதிக விலைபோயிருக்கிறார்கள். ஆனால் அனுபவம் வாய்ந்த இந்திய ஃபாஸ்ட் பவுலரான உமேஷ் யாதவ் வெறும் ரூ.1 கோடிக்கு மட்டுமே ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
undefined
மிட்செல் ஸ்டார்க், மலிங்கா ஆகியோரெல்லாம் உலகம் முழுதும் பல்வேறு டி20 லீக்குகளில் அபாரமாக ஆடினார்கள். அதனால் அதிக விலைக்கு ஏலம்போனார்கள். ஆனால் இப்போது அதிக விலைக்கு எடுக்கப்பட்டிருப்பவர்கள் எல்லாம், புதிய வீரர்கள். அவர்களையே அதிக விலைக்கு எடுக்கும்போது, உமேஷ் யாதவுக்கு ஒரு கோடி என்பதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை என்று நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
undefined
click me!