பிசிசிஐ மைண்ட் கேம் ஆடுறாங்க; பணிந்து போயிடாதீங்க! கிரிக்கெட் ஆஸி.,யை எச்சரிக்கும் உலக கோப்பை வின்னிங் கேப்டன்

First Published Oct 10, 2020, 6:40 PM IST

பிசிசிஐயின் கோரிக்கையை கிரிக்கெட் ஆஸ்திரேலியா(ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்) ஏற்கக்கூடாது ஆஸ்திரேலிய அணியின் உலக கோப்பை வின்னிங் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் கடும் காட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
 

ஐபிஎல் முடிந்ததும் இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்கிறது. 4 டெஸ்ட் போட்டிகள்கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.
undefined
டிசம்பர் 3ம் தேதி முதல் ஜனவரி 17ம் தேதி வரை இந்த தொடர் நடக்கவுள்ளது. பொதுவாக ஒவ்வொரு ஆண்டின் இறுதியில் தொடங்கி ஜனவரியில் முடியும் வகையில், ஆஸ்திரேலிய அணி, ஒரு டெஸ்ட் தொடரை ஆடும்.
undefined
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சமயத்தில் 2 டெஸ்ட் போட்டிகள் நடக்கும். கிறிஸ்துமஸ் முடிந்து டிசம்பர் 26ம் தேதி தொடங்கும் போட்டி மெல்போர்னில் நடைபெறும். அந்த டெஸ்ட் போட்டிக்கு பாக்ஸிங் டே டெஸ்ட் என்று பெயர். அதேபோல ஜனவரி முதல் வாரத்தில் ஒரு டெஸ்ட் நடக்கும். புற்றுநோய் விழிப்புணர்வுக்காக நடத்தப்படும் அந்த டெஸ்ட் சிட்னியில் தான் நடக்கும். அதற்கு பிங்க் டெஸ்ட் என்று பெயர்.
undefined
கிறிஸ்துமஸ் மற்றும் ஜனவரி முதல் வாரத்தில் மெல்போர்ன் மற்றும் சிட்னியில் டெஸ்ட் போட்டிகள் நடத்துவதை ஆஸ்திரேலியா மரபாகவே பின்பற்றிவருகிறது.
undefined
இந்நிலையில், இந்த முறை ஆஸ்திரேலியாவிற்கு இந்திய அணி செல்லவுள்ள நிலையில், சிட்னியில் நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டியை ஜனவரி 3ம் தேதி தொடங்காமல் ஒருசில நாட்கள் இடைவெளிவிட்டு தொடங்க வேண்டும் என்று பிசிசிஐ, கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
undefined
ஏனெனில் டிசம்பர் 26ம் தேதி தொடங்கும் பாக்ஸிங் டே டெஸ்ட் டிசம்பர் 30ம் தேதி தான் முடியும் என்பதால், வெறும் 2 நாட்கள் இடைவெளியில் அடுத்த டெஸ்ட்டை தொடங்காமல் சில நாட்கள் தாமதமாக தொடங்க வேண்டும் என்று பிசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளது.
undefined
இதை அறிந்த ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் கடும் கோபமடைந்துவிட்டார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆலன் பார்டர், பிசிசிஐயின் கோரிக்கை படுமோசமானது. பல ஆண்டுகளாக பாக்ஸிங் டே டெஸ்ட்டும் பிங்க் டெஸ்ட்டும் அடுத்தடுத்து நடத்தப்பட்டுவருகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டமாக அந்த டெஸ்ட் போட்டிகள் காலங்காலமாக அடுத்தடுத்து நடத்தப்பட்டுவருகிறது. இந்தியா கூடுதலாக 2 நாட்கள் இடைவெளி கேட்கிறது என்பதற்காக அதை மாற்றக்கூடாது.
undefined
பிசிசிஐ மைண்ட் கேம் ஆடுகிறார்கள் என்று நினைக்கிறேன். உலக கிரிக்கெட்டின் மாபெரும் சக்தியாக அவர்களை நினைத்து கொண்டிருக்கிறார்கள். பொருளாதார ரீதியாக அவர்கள் தான் பலம் வாய்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால் அதற்காக மரபை மாற்றமுடியாது என்று ஆலன் பார்டர் கடுமையாக விளாசியுள்ளார்.
undefined
click me!