2007 டி20 உலகக் கோப்பைக்கு பிறகு ஒரு போட்டியில் கூட விளையாடாத ஜோகிந்தர் சர்மா, அஜித் அகர்கர்!

First Published | Sep 24, 2024, 6:02 PM IST

T20 World Cup, Ajith Agarkar and Joginder Sharma: 2007 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஜோகிந்தர் சர்மா மற்றும் அஜித் அகர்கர் அதன் பிறகு இந்திய அணியில் இடம் பெறவில்லை.

2007 T20 World Cup

தோனி தலைமையிலான இந்திய அணியானது முதல் முறையாக 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை டிராபியை வென்று சரித்திரம் படைத்தது. டி20 உலகக் கோப்பை தொடரில் ஜோகிந்தர் சர்மா மற்றும் அஜித் அகர்கர் இருவரும் இடம் பெற்று விளையாடினர். அதன் பிறகு இருவரும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. ஏன் என்பது குறித்த சுவாரஸ்யமான விவரங்கள் குறித்து இந்தப் பதிவில் காணலாம் பார்க்கலாம் வாங்க…

Ajit Agarkar

முதல் முறையாக 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில், கடைசியாக இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக டி20 உலகக் கோப்பை டிராபியை கைப்பற்றியது. 

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டார்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க வீரர் கவுதம் காம்பீர் அதிரடியாக விளையாடி 75 ரன்கள் எடுத்துக் கொடுக்க, கடைசியாக வந்த ரோகித் சர்மா 30 ரன்கள் எடுக்கவே இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது.

Tap to resize

Joginder Sharma

பின்னர், கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்களில் 152 ரன்கள் மட்டுமே எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் மட்டுமே கொடுத்த இர்பான் பதான் ஆட்டநாயகன் விருது வென்றார். கடைசி ஓவரை சிறப்பாக வீசிய ஜோகிந்தர் சர்மா 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

யோகிந்தர் சர்மா வீசிய கடைசி ஓவரில் மிஸ்பா உல் ஹக் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஸ்ரீ சாந்த் கச்சிதமாக பிடிக்கவே இந்தியா த்ரில் வெற்றியை ருசித்தது. ஜோகிந்தர் சர்மாவின் கடைசி ஓவர் தான் இந்திய அணிக்கு டிராபியை வென்று கொடுத்தது. ஹரியானாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஜோகிந்தர் சர்மா மீண்டும் இந்திய அணிக்காக விளையாடவில்லை. இது ஆச்சரியமாக இருந்தாலும் இது தான் உண்மை.

Ajit Agarkar and Joginder Sharma

2007 டி20 உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு ஜோகிந்தர் சர்மாவைப் போன்று மற்றொரு இந்திய வீரரும் இந்திய அணியின் ஜெர்சியை அணிய முடியவில்லை. அவர் தான் இந்திய அணியின் தற்போதைய தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர்.

மும்பையைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான அஜித் அகர்கர் கடந்த 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி இந்திய அணிக்காக அறிமுகமானார். 1998 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரையில் 9 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். 26 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற அகர்கர் 571 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 58 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். இதே போன்று, 191 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 288 விக்கெட்டுகள் கைப்பற்றியதோடு, 1,269 ரன்கள் அடித்துள்ளார்.

T20 World Cup 2007

4 டி20 போட்டிகளில் விளையாடிய அகர்கர் 3 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். கடைசியாக நியூசிலாந்திற்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் இடம் பெற்று விளையாடினார். இது அஜித் அகர்கரின் கடைசி சர்வதேச போட்டியாகும். அதன் பிறகு இந்திய அணியில் அகர்கருக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை.

Latest Videos

click me!