#IPL2021Auction இந்த புறக்கணிப்பு எதிர்பார்த்ததுதான்..! ஏமாற்றத்தை ரொம்ப கூலா எதிர்கொள்ளும் சர்வதேச கேப்டன்

First Published Feb 21, 2021, 6:13 PM IST

ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலத்தில் தான் புறக்கணிக்கப்படப்போவதை உணர்ந்ததாக ஆஸி., ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் கடந்த 18ம் தேதி சென்னையில் நடந்தது. இந்த ஏலம் முழுக்க முழுக்க ஃபாஸ்ட் பவுலர்களுக்கான ஏலமாக அமைந்தது. ஃபாஸ்ட் பவுலர்களுக்கான கிராக்கி அதிகமாக இருந்ததால், கிறிஸ் மோரிஸ்(ரூ.16.25 கோடி), கைல் ஜாமிசன்(ரூ.15 கோடி), ஜெய் ரிச்சர்ட்ஸன்(ரூ.14 கோடி), மெரிடித்(ரூ.8 கோடி) ஆகியோர் அதிக விலைக்கு ஏலம்போனார்கள்.
undefined
மோரிஸ், ஜாமிசன், ஜெய் ரிச்சர்ட்ஸன், மேக்ஸ்வெல் எல்லாம் அதிகமான தொகைக்கு ஏலம்போன அதேவேளையில், ஆரோன் ஃபின்ச், ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், மார்டின் கப்டில், காலின் முன்ரோ ஆகிய அதிரடி வீரர்களை எந்த அணியும் எடுக்க முன்வராததால், அவர்களெல்லாம் விலைபோகவில்லை.
undefined
ஐபிஎல் ஏலத்தில் புறக்கணிக்கப்பட்டது பெரிய அசிங்கம் என்று ஜேசன் ராய் தெரிவித்திருந்த நிலையில், இதுகுறித்து மௌனம் கலைத்துள்ளார் ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் ஆரோன் ஃபின்ச். கடந்த சீசனில் ஆர்சிபி அணியில் ஆடிய ஃபின்ச்சை அந்த அணி கழட்டிவிட, 14வது சீசனுக்கான ஏலத்தில் ஃபின்ச்சை அவரது அடிப்படை விலைக்கு எடுக்கக்கூட எந்த அணியும் முன்வரவில்லை. ஐபிஎல்லில் கிட்டத்தட்ட அனைத்து அணிகளிலும் ஆடிவிட்ட ஃபின்ச்சுக்கு இது பெரும் அசிங்கமும் ஏமாற்றமும் கூட.
undefined
இந்நிலையில், இதை, தான் முன்பே எதிர்பார்த்ததாக ஃபின்ச் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ஆரோன் ஃபின்ச், மிகச்சிறந்த தொடரான ஐபிஎல்லில் மீண்டும் ஆடவே ஆசைப்பட்டேன். ஆனால், உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இந்த புறக்கணிப்பு எதிர்பார்க்காத ஒன்றல்ல; நான் எதிர்பார்த்ததுதான். கிரிக்கெட் ஆடத்தான் எனக்கு பிடிக்கும். ஆனால் அதேவேளையில், அதிகமான குவாரண்டினில் இருந்ததுடன், தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடிவந்த நிலையில், குடும்பத்துடன் இருக்க கிடைத்திருக்கும் வாய்ப்பை குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு மகிழவுள்ளதாக ஃபின்ச் தெரிவித்தார்.
undefined
click me!