ஐபிஎல் 2020: டெல்லி கேபிடள்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்.. இளமையும் அனுபவமும் கலந்த செம டீம்

First Published Sep 12, 2020, 10:03 PM IST

ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. வழக்கம்போலவே ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 3 அணிகளும் இந்த சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகின்றன.

இவற்றில் இளமையும் அனுபவமும் கலந்த டெல்லி கேபிடள்ஸ் அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு, ரிக்கி பாண்டிங் என்ற மிகப்பெரும் ஜாம்பவான் தலைமை பயிற்சியாளராக இருந்து சிறப்பாக வழிநடத்திவருகிறார். டெல்லி கேபிடள்ஸ் அணி, 6 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த சீசனில் தான் பிளே ஆஃபிற்கு சென்றது. 

டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஷ்ரேயாஸ் ஐயர், பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், ஷிம்ரான் ஹெட்மயர், அலெக்ஸ் கேரி என துடிப்பான இளம் வீரர்களும், ரஹானே, தவான், அஷ்வின் என அனுபவம் வாய்ந்த வீரர்களும் என துடிப்பான இளமையும் அனுபவமும் கலந்த கலவையாக அந்த அணி உள்ளது. இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, டெல்லி கேபிடள்ஸின் சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார். ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த டெல்லி கேபிடள்ஸ் ஆடும் லெவனை பார்ப்போம். 
 

1. ஷிகர் தவான் (தொடக்க வீரர்)
undefined
2. பிரித்வி ஷா (தொடக்க வீரர்)
undefined
3. ஷ்ரேயாஸ் ஐயர் (3ம் வரிசை வீரர், கேப்டன்)
undefined
4. ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்)
undefined
5. ஷிம்ரான் ஹெட்மயர் ( மிடில் ஆர்டர் அதிரடி பேட்ஸ்மேன்)
undefined
6. அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன்)
undefined
7. அக்ஸர் படேல் (ஸ்பின் ஆல்ரவுண்டர்)
undefined
8. ரவிச்சந்திரன் அஷ்வின் (சீனியர் ஸ்பின்னர்)
undefined
9. அமித் மிஷ்ரா (ரிஸ்ட் ஸ்பின்னர்)
undefined
10. இஷாந்த் சர்மா (ஃபாஸ்ட் பவுலர்)
undefined
11. காகிசோ ரபாடா (ஃபாஸ்ட் பவுலர்)
undefined
click me!