ஐபிஎல் 2026 தொடர் கிளைமேக்ஸை நெருங்கி விட்டது. ஆர்சிபி ஏற்கெனவே ப்ளேஆஃப் இடத்தை உறுதி செய்துவிட்டது. அதேபோல, ஹைதராபாத் மற்றும் குஜராத் அணிகளும் டாப் 4-க்குள் நுழைந்துவிட்டன. மீதமுள்ள ஒரு இடத்திற்கு 5 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஐபிஎல் 2026-ல் விளையாடும் சில ஸ்டார் வீரர்களுக்கு வயது மற்றும் ஃபிட்னஸ் காரணமாக அடுத்த ஆண்டு விளையாடுவது சந்தேகம்தான். இந்தப் பட்டியலில் முதல் பெயரைக் கேட்டால் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயம் உடையும். ஆம், அவர் வேறு யாருமல்ல, சென்னை சூப்பர் கிங்ஸின் 'தல' மகேந்திர சிங் தோனிதான். தோனியுடன் மேலும் நான்கு ஸ்டார் வீரர்கள் இந்தப் பட்டியலில் உள்ளனர். இது குறித்து பார்ப்போம்.