கம்பீர் செய்த பெரும் தவறு..! முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்விக்கான '5' காரணங்கள் இதுதான்!

Published : Nov 16, 2025, 04:07 PM IST

India’s 1st Test Defeat vs SA Reasons Explained: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கான 5 காரணங்களை விரிவாக இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
15
முதல் டெஸ்ட்டில் இந்தியா படுதோல்வி

கொல்கத்தாவில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. 2வது இன்னிங்சில் 124 ரன்களை துரத்திய இந்தியா வெறும் 93 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்துள்ளது. முதல் டெஸ்ட்டில் இந்திய அணி தோல்விக்கான 5 காரணங்கள் குறித்து பார்க்கலாம்.

25
1. இந்திய அணியின் மோசமான பேட்டிங்

பவுலிங்குக்கு சாதகமாக இந்த பிட்ச்சில் இந்தியாவின் பாஸ்ட் மற்றும் ஸ்பின் பவுலர்கள் நன்றாக பந்து வீசினார்கள். ஆனால் பேட்டிங் மோசமாக இருந்தது. வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா ஓரளவு சிறப்பாக பேட்டிங் செய்த நிலையில், முன்னணி பேட்ஸ்மேன்களான கே.எல்.ராகுல் (2 இன்னிங்சிலும் சேர்த்து 40 ரன்), ஜெய்ஸ்வால் (2 இன்னிங்சிலும் சேர்த்து 12), ரிஷப் பண்ட் (2 இன்னிங்சிலும் 29), துருவ் ஜூரல் (2 இன்னிங்சிலும் 27) ஆகியோ சொதப்பியது தோல்விக்கு ஒரு காரணமாகும்.

35
2. கம்பீர் செய்த பெரும் தவறு

முதல் டெஸ்ட்டில் தமிழக வீரர் சாய் சுதர்சனை பிளேயிங் லெவனில் சேர்க்காமல் கவுதம் கம்பீர் தவறு செய்து விட்டார். தென்னாப்பிரிக்கா ஸ்பின் பவுலிங்கில் தடுமாறும் என்பதால் 4 ஸ்பின்னர்கள் தேவையே இல்லை. அக்சர் படேல் அல்லது குல்தீப் யாதவ்வை நீக்கி விட்டு முழுமையான பேட்ஸ்மேனான சாய் சுதர்சனை களமிறக்கியிருக்க வேண்டும். ஏனெனில் பேட்டிங்குக்கு சாதகமான இந்த பிட்ச்சில் கூடுதல் பவுலர் தேவையில்லை. கூடுதல் பேட்ஸ்மேன் தான் தேவை.

45
3. டெம்பா பவுமாவின் மேஜிக் இன்னிங்ஸ்

கடினமான ஈடன் கார்டன் பிட்ச்சில் இரு அணியையும் சேர்த்து அரை சதம் அடித்த ஒரே பேட்ஸ்மேன் தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா தான். 2வது இன்னிங்சில் 136 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 55 ரன் அடித்து நாட் அவுட் ஆக திகழந்தார். ஒரு கட்டத்தில் 91/7 என பரிதவித்த அணியை டெயிலெண்டர்களை வைத்துக் கொண்டு 153 ரன்கள் வரை கொண்டு சென்றார். கடைசி 3 விக்கெட்டுக்கு தென்னாப்பிரிக்கா 62 ரன்கள் சேர்த்தது ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்து விட்டது.

55
4. சுப்மன் கில்லின் காயம்

இந்திய அணி கேப்டன் சுப்மன் கழுத்து தசைப்பிடிப்பு காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகினார். அவரால் இரண்டு இன்னிங்சிலும் பேட்டிங் செய்ய முடியவில்லை. சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனான கில்லின் விலகல் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது.

5. சைமன் ஹார்மரின் அசத்தல் பவுலிங்

தென்னாப்பிரிக்கா அணியின் ஸ்பின்னர் 36 வயதான சைமன் ஹார்மர் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 8 விக்கெட் வீழ்த்தி மேட்ச் வின்னராக ஜொலித்தார். வேகத்தை கூட்டி குறைத்து அவர் லாவகமாக பந்துவீசியது இந்திய அணி பேட்ஸ்மேன்களை திக்குமுக்காடச் செய்தது.

Read more Photos on
click me!

Recommended Stories