ஸ்பின்னர்கள் வீசிய நோ பாலால் இந்திய அணி அடைந்த டாப் 3 தோல்விகள்

First Published Mar 4, 2023, 11:48 AM IST

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட்டில் ரவீந்திர ஜடேஜா வீசிய நோ பால் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்ததுடன், இந்திய அணியின் தோல்விக்கும் காரணமாக அமைந்த நிலையில், ஸ்பின்னர்கள் வீசிய நோ பாலால் இந்திய அணி அடைந்த டாப் 3 தோல்விகளை பார்ப்போம்.
 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே இந்தூரில் நடந்த 3வது டெஸ்ட்டில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜடேஜாவின் பவுலிங்கில் ரன்னே அடிக்காமல் லபுஷேன் டக் அவுட்டானார். ஆனால் அது நோ பால் என்பதால் தப்பித்த லபுஷேன், அதன்பின்னர் கவாஜாவுடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 96 ரன்களை சேர்த்தார். அதுவே ஆஸ்திரேலிய அணி 88 ரன்கள் முன்னிலை பெற காரணமாக அமைந்து இந்திய அணியின் தோல்விக்கும் காரணமாக அமைந்துவிட்டது. இந்நிலையில், இதற்கு முன் ஸ்பின்னர்கள் வீசிய நோ பாலால் இந்திய அணி அடைந்த டாப் 3 தோல்விகளை பார்ப்போம்.

1. அஷ்வின் - 2016 டி20 உலக கோப்பை அரையிறுதி

2016 டி20 உலக கோப்பை அரையிறுதியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 192 ரன்களை குவித்தது. 193 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் லெண்டல் சிம்மன்ஸ்  அஷ்வின் வீசிய 7வது ஓவரில் ஆட்டமிழந்தார். ஆனால் அது நோ பால் என்பதால் தப்பித்த லெண்டல் சிம்மன்ஸ், அதன்பின்னர் அதிரடியாக ஆடி 51 பந்தில் 82 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் நின்று வெஸ்ட் இண்டீஸை வெற்றி பெற செய்தார்.

IND vs AUS: ஆட்டத்தையே தலைகீழாக திருப்பிய அந்த ஒற்றை பந்து.! அதுதான் இந்தியாவின் தோல்விக்கு காரணம் - கவாஸ்கர்
 

2. தீப்தி ஷர்மா - 2022 மகளிர் உலக கோப்பை

2022 மகளிர் ஒருநாள் உலக கோப்பையில் கண்டிப்பாக ஜெயித்தாக வேண்டிய போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொண்ட இந்திய அணி, முதலில் பேட்டிங் ஆடி 274 ரன்களை குவித்தது. 275 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணிக்கு கடைசி 2 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது தீப்தி ஷர்மா வீசிய பந்தில் தென்னாப்பிரிக்க வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கௌரிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால் அது நோ பாலாக அமைந்ததால் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இந்திய மகளிர் அணி தொடரை விட்டு வெளியேறியது.
 

3. யுஸ்வேந்திர சாஹல் - 2018ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வீசிய நோ பால்

2018ல் இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. முதல் 3 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, 4வது போட்டியில் ஜெயித்தால் தொடரை வென்றிருக்கலாம். ஆனால் அந்த போட்டியில் இந்திய அணி தோற்க சாஹல் வீசிய நோ பால் காரணமாக அமைந்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி 289 ரன்களை குவித்தது இந்திய அணி. 290 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியின் முதல் சில விக்கெட்டுகளை இந்திய அணி விரைவில் வீழ்த்தியது.  7 ரன்னில் டேவிட் மில்லர் சாஹலின் பந்தில் ஆட்டமிழந்தார். ஆனால் அது நோ பால் ஆனதால் அதன்பின்னர் அடித்து ஆடி 28 பந்தில் 39 ரன்கள் அடித்து இந்திய அணியை வீழ்த்த காரணமாக அமைந்தார் டேவிட் மில்லர்.

ICC WTC: இந்தியாவை வீழ்த்தி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா..! இந்திய அணிக்கு சிக்கல்

click me!