#INDvsENG இந்திய அணி கட்டாயம் செய்ய வேண்டிய 3 மாற்றங்கள்

First Published Mar 17, 2021, 4:37 PM IST

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி செய்ய வேண்டிய 3 மாற்றங்களை பார்ப்போம்.
 

இங்கிலாந்துக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணி 2 போட்டிகளிலும் இந்திய அணி ஒன்றிலும் வெற்றி பெற்றுள்ளன. கடைசி 2 போட்டிகளிலும் வென்றால் மட்டுமே இந்திய அணி கோப்பையை ஜெயிக்க முடியும் என்ற கட்டாயத்தில் உள்ள நிலையில், இந்திய அணி செய்ய வேண்டிய 3 மாற்றங்களை பார்ப்போம்.
undefined
1. கேஎல் ராகுலுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ்கேஎல் ராகுல் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ஒரு இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஆடும் ராகுல், 3 போட்டிகளில் 2ல் டக் அவுட். மொத்தமாகவே 3 போட்டியில் ஒரு ரன் மட்டுமே அடித்துள்ளார். அதேவேளையில், 2வது டி20 போட்டியில் அறிமுகமான சூர்யகுமார் யாதவ், பேட்டிங்கே ஆடவில்லை. ஆனாலும் அணியில் இடம்கொடுக்க முடியாத காரணத்தினால், 3வது டி20 போட்டியில் எடுக்கப்படவில்லை. எனவே ராகுலை நீக்கிவிட்டு சூர்யகுமார் யாதவை அணிக்குள் கொண்டுவரலாம்.
undefined
2. சாஹலுக்கு பதிலாக ராகுல் டெவாட்டியாஇந்திய அணியின் ரிஸ்ட் ஸ்பின்னர் சாஹலுக்கு பதிலாக ரிஸ்ட் ஸ்பின் ஆல்ரவுண்டர் ராகுல் டெவாட்டியாவிற்கு வாய்ப்பளிக்கலாம். சாஹலின் பவுலிங் இந்த தொடரில் சுத்தமாக எடுபடவில்லை. முதல் போட்டியில் 44 ரன்களை வாரிக்கொடுத்துவிட்டு ஒரேயொரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். 2வது போட்டியில் 34 ரன்களையும் 3வது டி20யில் 41 ரன்களையும் வாரி வழங்கினார் சாஹல். எனவே அவரை நீக்கிவிட்டு, பேட்டிங் நன்றாக ஆடத்தெரிந்த ரிஸ்ட் ஸ்பின்னர் ராகுல் டெவாட்டியாவை சேர்க்கலாம். ஐபிஎல்லில் அபாரமாக ஆடி கவனம் ஈர்த்த ராகுல் டெவாட்டியாவிற்கு கண்டிப்பாக இந்திய அணியில் வாய்ப்பளிக்கலாம்.
undefined
3. ரோஹித் - இஷான் கிஷன் தொடக்க ஜோடிராகுலை நீக்கிவிட்டு சூர்யகுமார் யாதவை சேர்ப்பதன் மூலம், ரோஹித்துடன் இஷான் கிஷனை தொடக்க வீரராக இறக்கமுடியும். சூர்யகுமார் யாதவ் 3 அல்லது 4ம் வரிசையில் ஆடலாம். 2வது டி20யில் தொடக்க வீரராக இறங்கி அடி வெளுத்துவாங்கி இஷான் கிஷன் அரைசதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.
undefined
click me!