#IPL2021 ஐபிஎல் 14வது சீசனில் ஆடமுடியாமல் திடீரென விலகிய 2 முக்கியமான வீரர்கள்

First Published Mar 29, 2021, 10:39 PM IST

ஐபிஎல் 14வது சீசனில் ஆடமுடியாமல் கட்டாயத்தின் பேரில் திடீரென விலகிய 3 முக்கியமான வீரர்களை பார்ப்போம்.
 

ஐபிஎல் 14வது சீசன் வரும் ஏப்ரல் 9ம் தேதி தொடங்குகிறது. இந்த சீசனில் இருந்து திடீரென விலகிய 2 முக்கியமான நட்சத்திர வீரர்களை பார்ப்போம்.
undefined
1. ஷ்ரேயாஸ் ஐயர் (டெல்லி கேபிடள்ஸ்)டெல்லி கேபிடள்ஸ் அணியை முதல் முறையாக கடந்த சீசனில் ஃபைனலுக்கு அழைத்து சென்ற கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர். ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையில் கடந்த 2 சீசன்களாக டெல்லி கேபிடள்ஸ் அணி சிறப்பாக செயல்பட்டுவருகிறது. டெல்லி அணியின் முக்கியமான வீரரே ஷ்ரேயாஸ் ஐயர் தான். அந்த அணியின் பேட்டிங் ஆர்டர் ஷ்ரேயாஸ் மிகவும் முக்கியமான நட்சத்திர பேட்ஸ்மேன். அப்படியிருக்கையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோள்பட்டையில் காயமடைந்த ஷ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல்லில் ஆடமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
undefined
2. ஜோஃப்ரா ஆர்ச்சர் (ராஜஸ்தான் ராயல்ஸ்)ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பவுலிங் யூனிட்டின் லீடரே ஆர்ச்சர் தான். ஆர்ச்சரை தவிர வேறு சிறந்த ஃபாஸ்ட் பவுலரே அந்த அணியில் இல்லாததுதான் அந்த அணியின் பலவீனமே. அதனால் தான் கிறிஸ் மோரிஸை கோடிக்கணக்கில் வாரி இறைத்து இந்த சீசனில் எடுத்துள்ளனர். ஆனாலும் ஆர்ச்சர் அளவிற்கு அவரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. ராஜஸ்தான் அணி பவுலிங்கில் பெரிதும் சார்ந்திருக்கக்கூடிய வீரரே ஆர்ச்சர் தான். ஆனால் காயம் காரணமாக அவர் இந்த சீசனில் ஆடவில்லை. இது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மரண அடி.
undefined
click me!