19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து, இந்தியாவை ஆறாவது முறையாக கோப்பையை வெல்ல வைத்தவர் வைபவ் சூர்யவன்ஷி.
இந்திய கிரிகெட் அணியின் இளம் புயல் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு டாடா நிறுவனம் டாடா கர்வ் (Tata Curvv) காரை பரிசாக வழங்கியுள்ளது. ஐபிஎல் 2025 தொடரில் அதிரடியில் பட்டைய கிளப்பிய வைபவ் 'சூப்பர் ஸ்டிரைக்கர் ஆஃப் தி சீசன்' விருதை வென்றார். இதனால் அவருக்கு ரூ.22 லட்சம் மதிப்புள்ள டாடா கர்வ் கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. வெறும் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை படைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார்.
24
ஐபிஎல் தொடரில் மெகா சாதனை
ஐபிஎல் 2025 தொடரில் கலக்கிய வைபவ், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெறும் 35 பந்துகளில் சதம் அடித்து வரலாறு படைத்தார். இதன் மூலம் யூசுப் பதானின் (37 பந்துகள்) சாதனையை அவர் முறியடித்தார். ஐபிஎல் தொடரில் மிக இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார். கடந்த ஐபிஎல் சீசனில் வைபவின் பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 206.56 ஆக இருந்தது.
34
இந்திய அணியின் மேட்ச் வின்னர்
ஐபிஎல் மட்டுமின்றி இந்திய அணிக்காவும் அசத்தி வரும் வைபவ், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து, இந்தியாவை ஆறாவது முறையாக கோப்பையை வெல்ல வைத்தார். அந்த தொடரின் சிறந்த வீரராகவும் வைபவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் தான் களமிறங்கும் போட்டிகளில் எல்லாம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
பீகாரில் உள்ள தாஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் அணியால் ரூ.1.10 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இதன்மூலம் மிக இளம் வயதில் ஐபிஎல்லில் விளையாடும் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். விவசாயியான அவரது தந்தை, தனது மகனின் கிரிக்கெட் மீதான அன்பைக் கவனித்தார்.
மகனை ஊக்குவிக்க அவர்களின் கொல்லைப்புறத்தில் ஒரு சிறிய விளையாட்டுப் பகுதியை உருவாக்கினார். பின்னர் வைபவின் கிரிக்கெட் கனவுகளை ஆதரிக்க தனது பண்ணையை விற்றார். வைபவ் சூர்யவன்ஷி தனது 12 வயதில் பீகார் அணிக்காக வினூ மன்கட் டிராபியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.