Broom Vastu Tips In Tamil
ஒவ்வொருவரும் தங்கள் வீட்டை அழகாகவும் தூய்மையாக வைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதற்காக அவர்கள் அவ்வப்போது வீட்டை சுத்தம் செய்கிறார்கள். வீட்டை நாம் சுத்தம் செய்வதற்கு துடைப்பத்தை பயன்படுத்துகிறோம். ஆனால், அவற்றை பயன்படுத்திய பிறகு அதை எங்கு வைக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். இது குறித்து வாஸ்து என்ன சொல்கிறது என்று இங்கு பார்க்கலாம்.
இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு தனி சிறப்பு உண்டு. வீடு கட்டுவது முதல் வீட்டில் இருக்கும் சில பொருட்கள் வரை என எல்லாவற்றிலும் வாஸ்துவை அவர்கள் பின்பற்றுவது வழக்கம்.
அந்த வகையில் எல்லோருடைய வீட்டிலும் பயன்படுத்தும் துடைப்பத்திற்கும் வாஸ்து பின்பற்றுவது மிகவு அவசியம் தெரியுமா? ஏனெனில், துடைப்பம் லட்சுமி தேவி வாசம் செய்யும் பொருளாகும். வீட்டை காலி செய்யும்போது நாம் எதை எடுத்து செல்கிறோமோ இல்லையோ கண்டிப்பாத்தை துடைப்பத்தை மறக்காமல் எடுத்து செல்ல வேண்டும். ஒருவேளை துடைப்பத்தை எடுத்துச் செல்லவில்லை என்றால், லட்சுமி தேவியை அங்கேயே விட்டு செல்லுவதாக அர்த்தம்.
Broom Vastu Tips In Tamil
இப்படிப்பட்ட சூழ்நிலையில், வீட்டில் சரியான திசையில் துடைப்பத்தை வைக்க வேண்டும். இல்லையென்றால், வீட்டில் வறுமை வர வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் துடைப்பத்தை எங்கு எந்த திசையில் வைக்க வேண்டும் மற்றும் வீட்டில் செல்வம் மகிழ்ச்சி பெருக துடைப்பம் தொடர்பான சில விஷயங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
துடைப்பம் வாங்க உகந்த நாட்கள்:
அமாவாசை, செவ்வாய், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே துடைப்பம் வாங்க சிறந்த நாட்கள் ஆகும். மேலும் திங்கள்கிழமை மற்றும் சுக்லபஷத்தின் போது துடைப்பம் வாங்க கூடாது என்று சாஸ்திரம் சொல்லுகின்றது. இது அசுபமாக கருதப்படுகிறது. இந்நாளில் துடைப்பம் வாங்கினால் வீட்டில் பொருளாதாரப் பிரச்சினை ஏற்படும்.
துடைப்பத்தை நிறுத்தி வைக்காதே:
துடைப்பத்தை பயன்படுத்தி பிறகு அதை நிறுத்தி வைக்க கூடாது என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது. அப்படி வைத்தால் அது கெட்ட சகுனமாக கருதப்படுகிறது. இதனால் வீட்டில் செல்வம், பணம் காலியாகிவிடும். எனவே, துடைப்பத்தை எப்போதும் வீட்டில் படுக்க வையுங்கள்.
இதையும் படிங்க: வீட்டில் பணத்தை ஈர்க்க.. செல்வம் செழிப்பு பெருக.. சிம்பிள் வாஸ்து டிப்ஸ்!!
Broom Vastu Tips In Tamil
துடைப்பத்தை இந்த இடங்களில் வைக்காதே:
லட்சுமி தேவியின் வடிவமாக கருதப்பட்டாலும் அதை ஒருபோதும் ஆபரணங்கள் அல்லது மதிப்புமிக்க பொருட்கள் இருக்கும் இடத்தில் வைக்க கூடாது. மீறி வைத்தால் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
உடைந்த துடைப்பத்தை பயன்படுத்த வேண்டாம்:
நீங்கள் உங்கள் வீட்டில் உடைந்த துடைப்பது பயன்படுத்தி வந்தால் உடனே அதை தூக்கி எறியுங்கள். ஏனெனில் வாஸ்து சாஸ்திரத்தின் படி, உடைந்த துடைப்பத்தை பயன்படுத்துவது நல்லதல்ல. இதனால் குடும்பத்தில் பிரச்சனைகள் கூட வரலாம்.
மாலை வேளையில் வீட்டை சுத்தம் செய்யாதே:
நம் வீட்டில் இருக்கும் பாட்டி மாலை வேளையில் வீட்டை பெருக்காதே என்று அடிக்கடி சொல்லுவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் அது ஏன் என்று தெரியுமா? மாலை வேளையில் வீட்டை பெருக்கின லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாவீர்கள். ஆகவே, ஒருபோதும் மாலை மற்றும் இரவு நேரங்களில் வீட்டை பெருக்குவதை தவிர்க்கவும். ஒருவேளை அப்படி பெருக்கினால் குப்பையை வீட்டிற்கு வெளியே கொட்ட வேண்டாம்.
இதையும் படிங்க: அளவில்லா பணம் கிடைக்க சிரிக்கும் புத்தர் சிலையை இந்த திசையில் வைங்க!!
Broom Vastu Tips In Tamil
துடைப்பத்தை எந்த திசையில் வைக்க வேண்டும்:
துடைப்பத்தை தென்மேற்கு அல்லது மேற்கு திசையில் தான் வைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது. ஆனால் அதை வடக்கு திசையில் ஒருபோதும் வைக்க கூடாது, அப்படி இந்த திசையில் வைத்தால் வீட்டில் சந்தோஷம் மகிழ்ச்சி அழிந்துவிடும். இது தவிர, வீட்டில் உள்ளவர்களுக்கு முன்னேற்றத்தில் தடை ஏற்படும்.
குறிப்பு :
வீட்டை சுத்தம் செய்யும்போது முதலில் மேற்காலது வடக்கு திசையில் இருந்து தான் பெருக்கத் தொடங்குங்கள். இப்படி செய்தால் தான் லட்சுமிதேவி உங்கள் வீட்டில் தங்குவாள். அதுபோல வீட்டை துடைத்த பின் குப்பைகளில் குப்பைத் தொட்டியில் போடுங்கள். வீட்டில் குப்பைகள் குவிந்து இருந்தால், வீட்டில் வறுமையும் துன்பமும் பெருகும்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி, துடைப்பத்தை ஒருபோதும் காலால் உதைக்காதீர்கள்.
அதுபோல துடைப்பத்தை சமையலறையில் வைக்க கூடாது மேலும் இரண்டு துடைப்பங்களையும் ஒருபோதும் ஒன்றாக வைக்கவும் கூடாது.
மேலே சொன்ன விஷயங்களை நீங்கள் பின்பற்றினால் லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் இதனால் உங்களது வீட்டில் பணத்தட்டுப்பாடு இருக்காது.