அளவில்லா பணம் கிடைக்க சிரிக்கும் புத்தர் சிலையை இந்த திசையில் வைங்க!!
Laughing Buddha Statue Vastu Tips : சிரிக்கும் புத்தர் சிலையை எங்கு வைப்பதால் வீட்டில் நிம்மதியும், செல்வமும் பெருகும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
புத்தர் சிலையை பார்த்தாலே போதும் மனதில் சாந்தம் உண்டாகும். அவருடைய சிலையை வீட்டில் வைப்பதால் அமைதி மட்டுமல்ல, செழிப்பும் கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கை. புத்தர் சிலைகளில் எல்லாவற்றையும் வைப்பதை விடவும் தியானம் செய்வது போன்ற புத்தர் சிலை வைப்பது சிறந்தது. ஒருபுறம் நிற்பது போன்ற புத்தர் சிலையையும் வைக்கலாம். இதனை புத்த மதம் கடவுளாக கருதுவதால் ஒருபோதும் இச்சிலையை அவதிக்கக் கூடாது.
புத்தர் சிலையை வைப்பதை விடவும் அதனை எந்த திசையில் வைக்கிறோம் என்பது முக்கியம். வாஸ்து சாஸ்திரத்தில் புத்தர் சிலையை எப்படி வைத்தால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து குடும்பத்தில் நிம்மதி நிலவும் என்பதை கொடுத்துள்ளார்கள். இதனை நாம் அறிந்து கொள்வது அவசியம்.
இதையும் படிங்க: உங்கள் வீட்டில் புத்தர் சிலையை இங்கு வையுங்க...நன்மைகள் பல கிடைக்கும்..!!
சிலர் குபேரன் சிலை வைப்பதாக நினைத்து சிரிக்கும் புத்தர் சிலையை வாங்கி வீட்டில் வைப்பார்கள். ஆனால் அது குபேரன் சிலை அல்ல. சீன நாட்டின் ஃபெங்சுயியில் சிரிக்கும் புத்தர் சிலையை செல்வத்தின் அடையாளமாக பார்க்கிறார்கள். அழகுக்காக வீட்டில் சிரிக்கும் புத்தர் சிலையை வைக்க வாங்குபவர்களும் உண்டு. உண்மையில் சிரிக்கும் புத்தர் செல்வத்தை ஈர்க்கிறார். அந்த சிலையை வீட்டில் வைப்பதால் செல்வம் பெருகும் என்கிறார்கள் சில ஆன்மீகவாதிகள்.
எந்த திசையில் வைக்கவேண்டும்? : தென்கிழக்கு திசையில் சிரிக்கும் புத்தரை வைத்தால் உங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். அளவில்லா வருமானமும் உங்களைத் தேடி வரும். கிழக்கு திசை வீட்டின் அதிர்ஷ்ட சுரங்கம். ஆகவே வீட்டின் கிழக்கு திசையில் சிரிக்கும் புத்தர் சிலையை வைக்கலாம். இதனால் குடும்பத்தில் நிம்மதி பெருகும். ஏற்கனவே குடும்பத்திற்குள் நிலவும் சண்டைகள், சச்சரவுகள் விலகிவிடும். சிரிக்கும் புத்தர் சிலை நமக்குள் இருக்கும் கெட்ட சிந்தனைகளை அகற்றி நேர்மறையான எண்ணங்களை தோன்ற செய்யும்.
இதையும் படிங்க: நம் மனதை எப்படி புரிந்து கொள்வது? புத்தர் கூறிய 5 நிலைகள்!!
எங்கு வைக்கலாம்? : சிரிக்கும் புத்தர் சிலையை வீட்டின் எந்த அறையிலும் வைக்கலாம். ஹால், படுக்கையறை அல்லது சாப்பிடும் அறை உள்ளிட்டவைகளில் வைக்கலாம்.