100 ஆண்டுகளுக்குப் பிறகு.. சூரியன் சுக்கிரன் சேர்க்கை.. இந்த 3 ராசிக்கு ராஜயோகம்!

Published : Sep 16, 2024, 08:59 AM ISTUpdated : Sep 16, 2024, 09:06 AM IST

Sun Venus Conjunction 2024 : சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு பூரம் நட்சத்திரத்தில் சூரியனும் சுக்கிரனும் இணைவதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்.

PREV
15
100 ஆண்டுகளுக்குப் பிறகு.. சூரியன் சுக்கிரன் சேர்க்கை.. இந்த 3 ராசிக்கு ராஜயோகம்!

ஜோதிட சாஸ்திரங்கள் படி, கிரகங்கள் அவ்வப்போது தங்களுடைய ராசியை மட்டுமின்றி, நட்சத்திரங்களையும் மாற்றிக் கொள்ளுவது வழக்கம். மேலும் சில சமயங்களில் கிரகங்களும் நட்சத்திரங்களும் ஒரே நேரத்தில் பயணிக்கும். இத்தகைய சூழ்நிலையில், அதன் தாக்கம் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் பாதிக்கும். இதனால் சுப மற்றும் அசுப பலன்கள் உண்டாகும்.

25

இந்நிலையில் செப்டம்பர் 30ஆம் தேதி திங்கள் கிழமை அன்று கிரகங்களின் அதிபதியான சூரியன் பூரம் நட்சத்திரத்தில் நுழையவுள்ளது. இந்த நட்சத்திரத்தில் ஏற்கனவே சுக்கிரன் உள்ளது. சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியனும் சுக்கிரனும் ஒரே நட்சத்திரத்தில் இணைந்துள்ளதால், சில ராசிக்காரர்களுக்கு அவர்களது வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் யார் என்பதை இங்கு பார்க்கலாம்.

35

ரிஷபம் : சூரியன் மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். இவர்கள் செய்யும் செயல் மேம்படும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வேலையில் வெற்றியை காண்பார்கள். சமூகத்தில் உங்களது மதிப்பும் அந்தஸ்து கூடும். எதிர்பாராத விதமாக உங்களது வருமானம் அதிகரிக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

இதையும் படிங்க:  புரட்டாசி மாதம் ராசி பலன்கள் 2024 : அதிஷ்டத்தை அள்ள போகும் ராசி இவுங்க!

45

கன்னி : சுக்கிரன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் கன்னி ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை அமோகமாக இருக்கும். இவர்களது ஆளுமை மேம்படும். செய்யும் தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய திட்டங்கள் கிடைக்கும் மற்றும் எதிர்பாராத லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல் முன்னேறுவதற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் சிக்கி இருந்த பணம் கிடைக்கும். நிதி ஆதாயங்கள் கூடும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வழி திறக்கும். உங்களது நீண்ட நாள் ஆசையும் நிறைவேறும்.

இதையும் படிங்க: இந்த 4 ராசிக்காரர்கள் மிகவும் சுயநலமாக இருப்பார்களாம்! கொஞ்சம் கவனமா இருங்க!

55

தனுசு : சூரியன் மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் தனுசு ராசிக்காரர்கள் நல்ல பலனை காண்பார்கள் இவர்களது வருமானம் அதிகரிக்கும் புதிய வருமானத்திற்கான ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். உங்களது திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். வெளிநாடு செல்பவர்களுக்கான வாய்ப்பு கிடைக்கும். புதிய வாகனம் சொத்து வாங்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories