புரட்டாசி மாதத்தின் சிறப்பு:
புரட்டாசி தமிழ் மாதத்தில் ஆறாவது மாதம் ஆகும். முக்கியமாக புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உரிய மாதம் ஆகும். மேலும், இம்மாதத்தில் முக்கிய விரதங்கள், பண்டிகைகள் வருகின்றது. குறிப்பாக, முன்னோர்களை வழிபடும் மகாளய பட்சம், மகாளய அம்மாவாசை விரதம் போன்றவை இம்மாதத்தில் தான் வருகிறது. இப்படி பல விரதங்கள் பண்டிகைகள் நிறைந்த இம்மாதத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக ஆன்மீக குணம் நிறைந்தவர்களாக இருப்பார்களாம். இவர்கள் இடம், பொருள், நேரம் பார்த்து பேசுபவர்களாகவும், பழகுவதற்கு ரொம்பவே இனிமையானவர்களாகவும் இருப்பார்களாம்.
புரட்டாசியில் பிறந்தவர்களின் குண நலன்கள் :
புரட்டாசியில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றும், அவர்களது குண நலன்கள் என்ன என்றும் எளிதில் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், அவர்கள் மற்றவர்களை எளிதில் புரிந்து கொள்வார்களாம். குறிப்பாக பிறரது மனம் புண்படாத வகையில் நடந்து கொள்வார்களாம். அதே சமய சுயகவுரவம் ரொம்பபே பார்ப்பார்களாம்.