புரட்டாசி மாதத்தில் திருமணம் செய்யலாமா?

Published : Sep 12, 2024, 09:56 AM ISTUpdated : Sep 12, 2024, 10:01 AM IST

 Purattasi Tamil Month 2024 : புரட்டாசி மாதத்தில் இந்து மத மக்கள் திருமணம் உள்ளிட்ட போன்ற சுப காரியங்களை செய்வதில்லை. அது ஏன் தெரியுமா?

PREV
14
புரட்டாசி மாதத்தில் திருமணம் செய்யலாமா?
Purattasi Tamil Month 2024 In Tamil

புரட்டாசி மாதம் தெய்வீக வழிபாட்டுக்குரிய மாதம் என்பதால், இந்த மாதத்தில் இந்து மத மக்கள் திருமணங்கள், வீடு கிரகப்பிரவேசம் போன்ற எந்த விதமான சுப காரியங்களையும் செய்ய மாட்டார்கள். மேலும் இதுகுறித்து விரைவாக இங்கு பார்க்கலாம்.

திருமணம் செய்யக்கூடாது : 

புரட்டாசி மாதத்தில் தான் முன்னோர்களுக்குரிய மகாளய பட்சம் அனுசரிக்கப்படுகிறது. இது தவிர, இம்மாதத்தில்தான் பெருமாளுக்கு விரதம் இருக்கப்படுகிறது, நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது இது போன்ற காரணத்தால் தான் இந்த மாதத்தில் இந்து மத மக்கள் திருமணம் உள்ளிட்ட போன்ற சுப காரியங்களை செய்வதில்லை.

24
Purattasi Tamil Month 2024 In Tamil

ஏன் வீடு கட்ட கூடாது?

புரட்டாசி மாதத்தில் தான் வாஸ்து பகவான் தூங்கிக் கொண்டிருப்பார். மற்ற சில மாதங்களில், அவர் விழித்திருப்பதால் அந்த மாதங்களில் வீடு கட்ட வாஸ்து பூஜை செய்தால் எந்த தடையுமின்றி, வீடு முழுமையாக கட்டப்படும் என்று சொல்லப்படுகிறது. மேலும் புரட்டாசி மாதத்தில் வாடகை வீடு சொந்த வீடு எந்த வீடாக இருந்தாலும், வீடு பால் காய்ச்சக் கூடாது என்று சொல்லுகிறார்கள். 

புரட்டாசி மாதத்தில் வளைகாப்பு செய்யலாமா?

புரட்டாசி மாதத்தில் வளைகாப்பு செய்தால் எந்தவித பாதிப்பும் இல்லை எனவே வளைகாப்பு நடத்தலாம். ஆனால், இந்த மாதத்தில் திருமணம், சாந்தி முகூர்த்தம் போன்றவற்றை நடத்துவது நல்லதல்ல. 

அதுபோல இந்நாளில் குழந்தைகளுக்கு மொட்டை அடிக்க காது குத்த போன்ற விஷயங்களையும் செய்யலாம் ஆனால் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் மட்டும் தான் செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 

34
Purattasi Tamil Month 2024 In Tamil

புரட்டாசி மாதத்தில் கல்வி கற்க ஆரம்பிக்கலாமா?

புரட்டாசி மாதத்தில் கல்வி கற்க தொடங்கலாம். அதுவும் குறிப்பாக,  புரட்டாசி மாதத்தில் வரும் விஜயதசமி அன்று கல்வி கற்க ஆரம்பித்தால் நல்ல கல்வி அறிவு கிடைக்கும் என்பது ஐதீகம். இது தவிர இந்நாளில் குழந்தைகளுக்கு புதிய விஷயங்கள் ஏதாவது கற்றுக் கொடுக்க ஆரம்பிக்கலாம், ஏன் புதிய தொழில் கூட இந்நாளில் தொடங்களாம். இதனால் தொழில் மென்மேலும் வளரும் என்பது நம்பிக்கை.

44
Purattasi Tamil Month 2024 In Tamil

திருமணம் மற்றும் வீடு கட்ட செய்ய உகந்த மாதம் எது?
இந்து மதத்தில் சுபகாரியங்கள் சில குறிப்பிட்ட தமிழ் மாதத்தில் மட்டுமே செய்ய வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் சொல்லுகின்றது. அந்த வகையில், திருமணத்தை சித்திரை, வைகாசி, ஆவணி, தை, பங்குனி போன்ற மாதங்களில் செய்தால் தம்பதிகள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் மற்றும் அவர்களுக்கு குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அதுபோல வீடு கட்ட உகந்த மாதங்கள் எதுவென்றால், சித்திரை வைகாசி ஐப்பசி கார்த்திகை தை மாசி ஆகியவை ஆகும் இந்த மாதங்களில் வீடு கட்டினால் வீடு கட்டும்போது எந்தவிதமான தடையும் வராது. ஆனால் ஆடி, ஆணி, புரட்டாசி, மார்கழி, பங்குனி போன்ற மாதங்களில் ஒருபோதும் வீடு வாங்கவே கூடாது மற்றும் வீட்டில் குடியேறவும் கூடாது என்று சொல்லப்பட்டு இருக்கிறது. மீறினால் பிரச்சனைகள் தான் வரும்.

Read more Photos on
click me!

Recommended Stories