புரட்டாசி மாதம் ராசி பலன்கள் 2024 : அதிஷ்டத்தை அள்ள போகும் ராசி இவுங்க!

First Published | Sep 11, 2024, 11:31 AM IST

Purattasi Month Rasi Palan 2024 : செப்டம்பர் 16ஆம் தேதி சூரியன் கன்னி ராசியில் பெயர்ச்சி அடையப்போவதால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கிரகங்களின் அதிபதி சூரியன். சூரியன் ஒவ்வொரு ராசியில் பெயர்ச்சி அடையும் போது, ஒவ்வொரு தமிழ் மாதம் உருவாகிறது. அந்த வகையில், தற்போது சிம்ம ராசியில் இருக்கும் சூரியன் கன்னி ராசியில் செப்டம்பர் 16ஆம் தேதி பெயர்ச்சி அடைப்போகிறது. சூரியனின் இந்த பெயர்ச்சியால் தமிழ் மாதமான புரட்டாசி மாதம் பிறக்கவுள்ளது. 

இந்தப் புரட்டாசி மாதம் சூரியன் கன்னி ராசியில் இருப்பதால் சில ராசிக்காரர்களுக்கு அம்மாதம் முழுவதும் அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் யார் என்று இப்போது இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் : சூரியனின் சஞ்சாரத்தால் புரட்டாசி மாசம் முழுவதும் மேஷ ராசிக்காரர்களுக்கு முன்னேற்றமும் வெற்றியும் நிறைந்த மாதமாக இருக்கும். அதாவது, நீங்கள் செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபத்தை காண்பீர்கள். உங்களது பொருளாதார நல்ல முன்னேற்றம் அடையும். வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

Tap to resize

மிதுனம் : சூரியனின் சஞ்சாரத்தால் புரட்டாசி மாதம் முழுவதும் மிதுன ராசிக்காரர்களுக்கு சூழ்நிலை சாதகமாக அமையும். வெளியூர் மற்றும் வெளிநாட்டில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பல நாட்களாக தடைபட்டிருந்த ஒப்பந்தம் கிடைக்கும் உங்களது நிதி நிலைமை மேம்படும் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். செய்யும் வேலை சிறப்பாக நடக்கும்.

Cancer

கடகம் : சூரியனின் சஞ்சாரத்தால் புரட்டாசி மாதம் முழுவதும் கடக ராசிக்காரர்களுக்கு நன்மைகள் பல கிடைக்கும். வேலை செய்பவருக்கு பண வரவு அதிகரிக்கும். பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். செய்யும் தொழிலில் நல்ல லாபத்தை காண்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். மேலும் குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் எதிர்பார்க்காத அளவுக்கு அதிகரிக்கும்.

சிம்மம் : சூரியனின் சஞ்சாரத்தால் புரட்டாசி மாதம் முழுவதும் சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டும். அதாவது, இம்மாதம் முழுவதும் நீங்கள் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். வேலை தொடர்பாக செல்லும் பயணம் நல்ல பலனை தரும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கிய மேம்படும்.

இதையும் படிங்க:  இந்த 4 ராசிக்காரர்கள் கோடீஸ்வரராக வேண்டும் என்பதற்காகவே பிறந்தவர்கள்! நீங்க என்ன ராசி?

விருச்சிகம் : சூரியனின் சஞ்சாரத்தால் புரட்டாசி மாதம் முழுவதும் விருச்சக ராசி காரர்களுக்கு லாபம் நிறைந்த மாதமாகும். உங்களது அனைத்து முயற்சிகளும் வெற்றியில் முடியும் வேலை தொடர்பாக செய்யும் பயணங்கள் வெற்றியையும் எதிர்பார்க்காத லாபத்தையும் கொடுக்கும். இம்மாதம் நீங்கள் நினைத்துக் கூட பார்க்காத அளவிற்கு பணம் வரவு அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

இதையும் படிங்க:  முதுகில் குத்தும் குணம் கொண்ட 4 ராசிக்காரர்கள் இவர்கள் தானாம்! உங்க ராசி எது?

தனுசு : சூரியனின் சஞ்சாரத்தால் புரட்டாசி மாதம் முழுவதும் தனுசு  ராசிக்காரர்களுக்கு அனுகலம் நிறைந்திருக்கும். நீங்கள் ஈடுபடும் எல்லா விஷயங்களிலும் சாதகமான பலன்களை பெறுவீர்கள். வேளையில் இருப்பவர்களுக்கு மதிப்பு மரியாதை கிடைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. புதிதாக வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.

Latest Videos

click me!