மகாளய அமாவாசையில் சூரிய சந்திர கிரகணம் மக்களுக்கு பெரிய ஆபத்தா?

First Published | Sep 10, 2024, 10:46 AM IST

Mahalaya Amavasai 2024 : மகாளய பட்சத்தின் ஆரம்பம் மற்றும் முடிவு இரண்டுமே விசேஷமானது அது ஏன் என்று இங்கு விரிவாக பார்க்கலாம்.

Mahalaya Amavasai 2024 In Tamil

ஒவ்வொரு ஆண்டும் மகாளய பட்சம் 14 நாட்கள் அனுசரிக்கப்படுகிறது. இந்த 14 நாட்களுக்கு பிறகு வரும் அமாவாசை தான் மகாளய அமாவாசை ஆகும். மேலும் இந்த நாட்கள் முன்னோர்களுக்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. புராணங்கள் படி, முன்னோர்கள் இந்த காலகட்டத்தில் பூமிக்கு வந்து, நாம் அவர்களுக்கு செய்யும் கடமைகளை பார்த்து, மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிப்பார் என்று சொல்லப்படுகிறது.

Mahalaya Amavasai 2024 In Tamil

அதுபோல, இந்து மதத்தில் அமாவாசை திதியானது முன்னோர்களை வழிபடுவதற்கு உரிய முக்கிய நாளாக கருதப்படுகிறது. அதுவும், மகாளய அமாவாசை நாளில் விரதம் இருந்து, புனித நீராடி, தானம் தர்ப்பணம் செய்தால் முன்னோர்களின் ஆசி நமக்கு முழுமையாக கிடைக்கும் மற்றும் அவர்களது ஆத்மாவும் சாந்தி அடையும் என்பது நம்பிக்கை. இவற்றை செய்வதன் மூலம் முன்னோர்கள் மகிழ்ந்தால் பரம்பரை விருத்தி அடையும் என்று சொல்லப்படுகிறது.

Tap to resize

Mahalaya Amavasai 2024 In Tamil

அந்தவகையில் இந்த ஆண்டு 2024 மகாளய அமாவாசை தினம் மிகவும் விசேஷமானது. ஏனெனில், இந்த ஆண்டு மகாளய பட்சம் செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 2ம் தேதி மகாளய அமாவாசையுடன் நிறைவடைகிறது. இதில் விசேஷம் என்னவென்றால், மகாளய பட்சம் தொடங்கும் நாளில் சந்திர கிரகணமும், மகாளய அமாவாசை நாளில் சூரிய கிரகணம் நடக்கப்போகிறது. இந்த இரண்டு கிரகங்கள் 15 நாட்கள் இடைவெளியில் நிகழ்கின்றது.

Mahalaya Amavasai 2024 In Tamil

இந்த வருடத்தின் இரண்டாவது சூரிய கிரகணம் இரவு 9:13 மணிக்கு தொடங்கி, 3:17 மணிக்கு முடிவடைகிறது. எனவே, இந்த நேரத்தில் நம்மால் நம்முடைய நாட்டில் சூரிய கிரகணத்தை பார்க்க முடியாது. முக்கியமாக இந்த வருடத்தில் சூரியன் மற்றும் சந்திர கிரகணம் 15 நாட்கள் இடைவெளியில் வருவதால், அது அவ்வளவு சுபகாரியம் இல்லை என்கின்றனர் பண்டிதர்கள்.

Latest Videos

click me!