Mahalaya Patcham 2024
மகாளய பட்சம் என்பது முன்னோர்களின் அருளை பெறுவதற்கு மிக காலமாகும். இந்த காலத்தில் தான் பித்ருலோகத்தில் இருக்கும் நம்முடைய முன்னோர்கள், பூமிக்கு வந்து நமக்கு ஆசி வழங்குவார்கள்.
பொதுவாகவே, ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னுடைய வாழ்நாளில் தெய்வ கடன், குருக்கள் முனிவர்களின் கடன் மற்றும் முன்னோர்களின் கடன் என்று 3 வகையான கடன்கள் இருக்கும். மேலும், அவற்றை கண்டிப்பாக அடைக்க வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லிருப்பதை நீங்களும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
இதையும் படிங்க: பித்ரு தோஷம் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி? தோஷம் விலக எளிய பரிகாரங்கள்
Mahalaya Patcham 2024
இவற்றுள் முன்னோர்களின் கடன் அடைக்க உகந்த காலம்தான் மகாளய பட்சம். இந்த மகாளய பட்சம் ஒவ்வொரு ஆண்டும் 14 நாட்கள் அனுசரிக்கப்படும். இந்த 14 நாட்களுக்கு பிறகு வரும் அமாவாசை தான் மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. இந்த 14 நாட்களும் கூடிய என்பதால் இந்நாளில் எந்த சுப காரியங்களும் செய்வதை தவிர்ப்பது நல்லது. அந்த வகையில், இந்த 2024-ம் ஆண்டு
மகாளய பட்சம் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 2 வரை உள்ளது.
உங்களது வாழ்க்கையில் தீராத பிரச்சனைகள் மற்றும் துன்பங்களை நீங்கள் அனுபவித்தால், அதற்கு முக்கிய காரணம் நீங்கள் உங்களது முன்னோர்களுக்குரிய கடமையை செய்யாமல் இருப்பது. ஆம், முன்னோர்களுக்குரிய கடனை சரியாக செய்யாவிட்டால் பித்ரு தோஷம், சாபம் ஏற்படும். இதனால் உங்களது பரம்பரைக்கு துன்பங்கள் மற்றும் காரிய தடைகள் ஏற்படும். எனவே, பித்ருக்களின் சாபம் நீங்க பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய ஏதாவது கடமைகள் பாக்கி இருந்தால், அதை இந்த ஆண்டு வரும் மகாளய பட்சத்தில் செய்து சரி செய்து விடுங்கள்.
Mahalaya Patcham 2024
இந்த மகாளய பட்சத்தில் முன்னோர்கள் பூலோகத்தில் இருந்து பூமிக்கு வருவதால் அவர்களை மகிழ்விப்பதற்காக திதி, தர்ப்பணம் கொடுப்பது மிகவும் அவசியம். எனவே, உங்களது முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை காகங்கள், பசுக்கள், நாய்களுக்கு அவர்களது நினைவாகக் கொடுக்கலாம். அதுமட்டுமின்றி, ஏழைகளுக்கு மாற்று திறனாளிகளுக்கு உணவு, உடை வழங்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களது முன்னோர்கள மகிழ்ந்து, உங்களையும், உங்களது சன்னிதியையும் ஆசீர்வதிப்பார்.
ஒருவேளை உங்களால் 14 நாட்களும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியவில்லை என்றால், கண்டிப்பாக ஒருநாளாவது தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
Mahalaya Patcham 2024
உங்களுக்கு தெரியுமா.. மகாளய பட்சத்தில் முன்னோர்களுக்கு செய்யும் தர்ப்பணம், திதி, அன்னதானம் ஆகியவை உங்களுக்கு அடுத்து வரும் 21 தலைமுறைக்கு போய் சேரும் என்று சொல்லப்படுகிறது. அதுபோல, இந்நாளில் அன்னதானம் செய்தால் முன்னோர்களின் ஆசி கிடைத்து உங்களது பரம்பரை விருத்தி அடையும். மேலும், நீங்கள் இந்த மகாளய பட்சத்தில் செய்யும் தானங்கள் உங்களது தலைமுறையை செழித்தோங்க வைக்கும். இது குறித்து சாஸ்திரங்களில் கூட சொல்லப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: Pitru Dosha: பித்ரு தோஷம் நீங்க...வீட்டில் முன்னோர்களின் படங்களை வைக்க இந்தத் திசை வையுங்கள்..!!