
விநாயகர் சதுர்த்தி இந்து மத மக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். விநாயகப் பெருமான் முதற்கடவுளாக அவதரித்த நாளை தான், அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடி வருகிறார்கள். ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் விநாயகப் பெருமான் அவதாரம் எடுத்ததாகவும் புராணங்கள் சொல்லுகின்றது. இதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் விநாயகர் வழிபடுவதற்கு உரிய மாதமாக கருதப்படுகிறது.
அந்த வகையில், விநாயகப் பெருமானின் பக்தர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்த 2024 ஆம் ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தியானது இன்று (செப்.07) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடுகின்றது. ஆனால், வடமாநிலங்களில் விநாயகர் சதுர்த்தியானது 10 நாள் கொண்டாடப்படும் என்பதால், இன்று தொடங்கி, செப்டம்பர் 17ஆம் தேதி முடிவடையும்.
விநாயகர் சதுர்த்தி நாளில் விநாயகர் பெருமானின் பக்தர்கள் தங்களது வீட்டில் விநாயகர் சிலையை வைத்து பூஜை செய்வார்கள். இந்த பூஜையில், விநாயகப் பெருமானுக்கு பிடித்த சில பொருட்கள் வைத்து வழிபடுவார்கள். குறிப்பாக, இந்த 7 பொருட்கள் இல்லையென்றால் வழிபாடு முழுமையடையாது. எனவே, விநாயகர் சதுர்த்தி நாளில் விநாயகப் பெருமானை மகிழ்விக்க, பூஜையில் வைக்க வேண்டிய பொருட்கள் என்னென்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்திக்கு பின்னாடி இப்படி ஒரு சம்பவமா? சுவாரஸ்யமான தகவல்கள்!!
விநாயகர் சதுர்த்தி நாளில் பூஜையில் இருக்க வேண்டிய பொருட்கள் :
1. கொழுக்கட்டை : விநாயகப் பெருமானுக்கு கொழுக்கட்டை என்றால் ரொம்பவே பிடிக்கும் என்று சொல்லப்படுகிறது எனவே, விநாயக சதுர்த்தி பூஜையின் போது 21 கொழுக்கட்டைகளை விநாயகப் பெருமானுக்கு பிரசாதமாக கொடுங்கள். பூஜை முடிந்த பின்னர் இந்த பிரசாதத்தை குழந்தைகளுக்கு கொடுத்தால், உங்களது கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்.
2. மோடகம் : விநாயகர் சதுர்த்தி பூஜை நாளில் விநாயகருக்கு பிடித்த இந்த உணவு கண்டிப்பாக இருக்க வேண்டும். ஏனெனில், பார்வதி தேவி இந்த சுவையான இனிப்பு உருண்டைகளை விநாயகர் பெருமாளுக்கு ஊட்டியதாக இந்துக்கள் நம்புகிறார்கள். அன்றிலிருந்து இந்த உணவு விநாயகருக்கு மிகவும் பிடித்தமான உணவாக கருதப்படுகிறது. அதனால் தான் விநாயகர் பூஜையில் இந்த உணவு கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
3. தர்ப்பை புல் : விநாயகப் பெருமானே பிரியப்படுத்த விநாயகர் சதுர்த்தி பூஜையின் போது விநாயகருக்கு தர்ப்பை புல்லை வழங்குங்கள். விநாயகர் பூஜையின் போது, தர்ப்பை புல்லை பயன்படுத்தினால், விநாயகருக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருவதாக இந்துக்கள் நம்புகிறார்கள்.
4. மஞ்சள் நிறம் : விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிடித்த நிறம் மஞ்சள் நிறம் என்பதால், விநாயகர் சதுர்த்தி நாளில் பூஜையின் போது விநாயகரை சாந்தப்படுத்த, பச்சை மற்றும் மஞ்சளில் விநாயகரை படைக்கவும். முதல் பூஜை செய்த பிறகு அந்த மஞ்சள் விநாயகரை அறையில் உள்ள லாக்கரில் வைக்கவும்.
5. வாழைப்பழம் : விநாயகர் சதுர்த்தி பூஜை வழிபாட்டில் வாழைப்பழம் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதுவும் நீங்கள் விநாயகர் பெருமானுக்கு வைக்கும் வாழைப்பழத்தை ஜோடிகளாக வையுங்கள்.
6. குங்குமம் : விநாயக சதுர்த்தி பூஜையில் விநாயகப் பெருமானுக்கு குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். ஏனெனில், செவ்வாய் கிரகத்தின் அடையாளமாக குங்கும் கருதப்படுவதால், கணபதி பூஜையில் குங்குமம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
7. மஞ்சள் பூக்கள் : விநாயகர் சதுர்த்தி பூஜையின் இப்போது விநாயகர் பெருமானுக்கு மஞ்சள் நிற பூவை வைத்து அர்ச்சனை செய்தால் விநாயகர் மகிழ்ச்சி அடைவார். ஆனால், எக்காரணம் கொண்டும் நீங்கள் கணபதி பூஜையில் துளசி பயன்படுத்த வேண்டாம்.
இதையும் படிங்க: பணம் வற்றாமல் பெருக சதுர்த்தி அன்று விநாயகர் சிலையை வீட்டில் இப்படி வைங்க!!