Tirumala Tirupati
உலக பிரசித்த பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதேநேரத்தில் திருப்பதி லட்டை சாப்பிட வேண்டும் என்பதற்காகவே சில பக்தர்கள் திருப்பதிக்கு சென்று வருகின்றனர். அந்த அளவுக்கு மிகவும் சுவை நிறைந்தது. அத்துடன், திருப்பதி தரிசனம் முடிந்து ஊர் திரும்பும் பக்தர்கள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு லட்டு பிரசாதத்தை கொடுப்பதை வழக்கம். இதன் காரணமாக அவர்கள் அதிக எண்ணிக்கையிலான லட்டுகளை வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
Tamilnadu
இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் மற்றொரு சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, உள்ளூர் கோயில்கள் மற்றும் தகவல் மையங்களிலும் லட்டு பிரசாதத்தை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக உள்ளூர் கோயில்களான திருச்சானூர் பத்மாவதி அம்மன் கோயில், திருப்பதி கோதண்டராம சுவாமி கோயில், கோவிந்தராஜ சுவாமி கோயில், ஸ்ரீநிவாமங்கபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில், அப்பளயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயில், ஒண்டிமிட்டா கோதண்டராம சுவாமி கோயில், ஐதராபாத் ஜூப்லி ஹில்ஸ், அமராவதி, விஜயவாடா, ராஜமுந்திரி, பிதாபுரம், விசாகப்பட்டினம், ராம்பச்சோடவரம் சென்னை, வேலூர், பெங்களூர் ஆகிய இடங்களில் லட்டு விற்பனை செய்யப்படுகிறது.