Tirupati Temple: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் இதுதான்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். ஆனால், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் பல இருந்தும் பலரும் அதை பார்க்காமலேயே சென்று விடுகின்றனர்.
Tirumala Tirupati
உலக பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில். இக்கோவிலுக்கு விடுமுறை நாட்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் தினமும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து பல மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அவர்களுக்கு சிரமமின்றி செல்ல உணவு, தண்ணீர் உள்ளிட்ட ஏற்பாடுகளை கோவில் தேவஸ்தானம் சார்பில் செய்து தரப்படுகிறது.
Tirumala Tirupati Devasthanam
ஆனால், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் பல இருந்தும் அதை பார்க்காமல் கேட்டை எப்போது திறப்பார்கள். எப்போது ஏழுமலையானை தரிப்பது என பக்தர்கள் இருப்பார்கள். ஆனால் உண்மையாகவே திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய விஷங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
இதையும் படிங்க: Spritual Tour for Vaishnava Temples: வைணவ கோயில்களுக்கு ஒருநாள் இலவச ஆன்மிக பயணம்! வெளியான சூப்பர் அறிவிப்பு!
Tirupati Devotees
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நுழையும் முன் பெரிய கடப்பாரை இருக்கும். அந்த கடப்பாரையை கண்டிப்பாக பார்க்க வேண்டும். அதேபோல் உள்ளே வரும் போது மண்டபத்தில் தனிகை நடக்கும் இடத்தில் ஒரு பெருமாள் இருப்பார். அப்படியே சுற்றி வந்ததால் விமானத்தின் மேலே சீனிவாச பெருமாள் இருப்பார். கண்டிப்பாக சீனிவாச பெருமாளை பார்க்க வேண்டும். அப்படி வெளியே வரும் போது வராகமூர்த்தி இருப்பார். அந்த திருப்பதி மலையே வராகமூர்த்திக்கு தான் சொந்தம். வராகமூர்த்தி சன்னதி குளத்திற்கு அருகே உள்ளது.