தூக்கம் இல்லாமல் கஷ்டப்படுறீங்களா? உங்க வீட்ல 'இந்த' வாஸ்து பிரச்சனைகள் இருக்கலாம்!
Vastu Tips For Sleepless Nights : இரவு தூக்கம் வராமல் அவதிப்படுகிறீர்கள் என்றால், அதற்கு வீட்டில் இருக்கும் வாஸ்து பிரச்சனைகள் தான் காரணம்..
Vastu Tips For Sleepless Nights : இரவு தூக்கம் வராமல் அவதிப்படுகிறீர்கள் என்றால், அதற்கு வீட்டில் இருக்கும் வாஸ்து பிரச்சனைகள் தான் காரணம்..
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இதற்கு பிசியான வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தம் தான் முக்கிய காரணம். மேலும் தூக்கமின்மை உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கிறது என்று நிபுணர்கள் சொல்லுகின்றன. இதன் காரணமாக பல தூக்க மாத்திரைகளை சாப்பிடுகிறார்கள். ஆனால் அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. சில நேரங்களில் தூக்கமின்மை மட்டுமல்ல வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருந்தாலும் ஏற்படலாம் என்று வாஸ்து நிபுணர்கள் சொல்லுகின்றனர்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் வாஸ்து தோஷங்கள் இருந்தால் வீட்டில் உள்ளவர்களால் சரியாக தூங்க முடியாது. வாஸ்து சாஸ்திரத்தில் நல்ல தூக்கத்திற்கான பரிகாரங்கள் பல கூறப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றுவதன் மூலம் தூக்கமின்மை பிரச்சனை நீங்கிவிடும். எனவே நீங்கள் தூக்கமின்மை பிரச்சனைகள் அவதிப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் தூங்கும் அறையில் கண்டிப்பாக வாஸ்து விதிகளை கடைபிடிக்க வேண்டும். அவை என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி தூங்கும் அறையில் கண்ணாடி வைப்பது தூக்கத்தை பாதிக்கும் படுக்கை அறையில் கண்ணாடி இருந்தால் இரவு அதை ஒரு துணியால் மூடி வைக்கவும் அது போல படுக்கை அறையில் துடைப்போம் வைக்கவே கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
எலக்ட்ரானிக் பொருட்களை வைக்காதே!
அதுபோல தூங்கும் அறையில் டிவி, கணினி போன்ற எந்த ஒரு எலக்ட்ரானிக் பொருட்களையும் வைக்கக்கூடாது என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது. எனவே, தவறுதலாக கூட இந்த பொருட்களை வைக்காதீர்கள். இல்லையெனில் உங்களது தூக்கம் பாதிக்கப்படும்..
இதையும் படிங்க: வீட்டின் வாசலில் 'இந்த' பொருட்களை வைக்காதீங்க.. ஒரு நல்லதும் நடக்காது!
நீங்கள் தூங்கும் அறையின் திசை சரியானதாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதாவது வாஸ்து சாஸ்திரத்தின் படி, படுக்கையறையானது வடகிழக்கு திசையில் இருக்கக்கூடாது. இதனால் தூக்கம் கலைந்து உங்களால் இரவு தூங்க முடியாமல் போகும்.
படுக்கையறையில் சாப்பிடாதே!
வாஸ்து சாஸ்திரத்தின் படி படுக்கை அறையில் அமர்ந்து ஒருபோதும் சாப்பிட வேண்டாம் இப்படி செய்தால் உங்களது தூக்கம் கெட்டுப் போய்விடும். அதுபோல வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றாக சாப்பிடுங்கள். இதனால் மனம் அமைதி அடையும், நீங்கள் மகிழ்ச்சியாக உணர்வீர்கள் இரவு நல்ல தூக்கம் வரும்.
இதையும் படிங்க: சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு தப்பி தவறி கூட இந்த '3' காரியங்களை செஞ்சிடாதீங்க! பணக்கஷ்டம் வரும்
தொடர்ந்து தூக்கும் என்னை பிரச்சனைகள் நீங்கள் அவதிப்படுகிறீர்கள் என்றால் இரவு தூங்கும் முன் படுக்கையறையில் நெய் விளக்கை ஏற்றவும் இப்படி செய்தால் இரவு நல்ல தூக்கம் வரும்.
நினைவில் கொள்:
- வாஸ்து சாஸ்திரத்தின் படி, நீங்கள் தூங்கும் படிக்க எனது சதுர வடிவில் தான் இருக்க வேண்டும் இது நல்ல தூக்கம் தருவதாக சொல்லப்படுகின்றது.
- அதுபோல படுக்கையறையில் தண்ணீர் பாட்டில் அல்லது வேறு எந்த ஒரு பாத்திரத்தையும் வைக்க வேண்டாம் ஏனெனில் தண்ணீர் மனதையும் மூலிகையும் எதிர்மறையாக பாதிக்கும்