இரவில் ஸ்ப்ரே போடுறீங்களா? நீங்க கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய தகவல்!

Published : Jan 29, 2025, 07:10 PM IST

Perfume At Night : இந்த பதிவில் இரவு நேரத்தில் வாசனை திரவியங்கள் ஏதும் போடக்கூடாது என்று சாஸ்திரங்கள் சொல்லுகிறது அது ஏன் என்று தெரிந்து கொள்ளலாம்.

PREV
14
இரவில் ஸ்ப்ரே போடுறீங்களா? நீங்க கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய தகவல்!
இரவில் ஸ்ப்ரே போடுறீங்களா? நீங்க கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய தகவல்!

பொதுவாக வெளியில் செல்லும்போதெல்லாம் நம்மில் பெரும்பாலானோருக்கு வாசனை திரவியம் பயன்படுத்துவது வழக்கம். வாசனை திரவியம் பயன்படுத்தாமல் அவர்கள் வெளியில் செல்ல விரும்ப மாட்டார்கள். ஆனால், இரவு நேரத்தில் எங்காவது வெளியே செல்ல வேண்டிய சூழ்நிலை வந்தால் வாசனை திரவியம் பயன்படுத்த கூடாது தெரியுமா? சாஸ்திரங்கள் படி இது மங்களகரமானதாக கருதப்படவில்லை.   உண்மையில் ஜோதிட சாஸ்திரத்தில், இரவில் நறுமணம் தொடர்பான எந்தவொரு வாசனை திரவியமும் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது அது ஏன் என்பதற்கான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

24
எதிர்மறை சக்தியை ஈர்க்கும்:

ஜோதிட சாஸ்திரங்கள் படி ,இரவு நேரத்தில் வாசனை திரவியங்களை பயன்படுத்துவது அல்லது தீய சக்திகளை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது. வலுவான நறுமணம் ஆனது எதிர்மறை சக்தியை ஈர்க்கும் சூழலை உருவாக்கும். இதனால் அமைதியான தூக்கம் மற்றும் ஆன்மீக வளர்ச்சியும் சீர்குலையும். எனவே, சாஸ்திரங்கள் படி இரவில் வாசனை திரவியம் பயன்படுத்துவதை தவிர்ப்பதன் மூலம், தீய சக்திகளிடம் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இதையும் படிங்க: காகம் தலையில் தட்டினால் அசுபமா..? இதற்கு பரிகாரம் உண்டா..?

34
சுய பிரதிபலிப்பை தடுக்கும்:

இரவில் வாசனை திரவியம் பயன்படுத்துவது ஆன்மீக மற்றும் தியானத்திற்கு இடையூறாக இருக்கும். இதன் காரணமாக கடவுளுடான நமது தொடர்பை பலவீனமாக்கும். முக்கியமாக, வாசனை திரவியமானது நம்மை திசை திருப்பம். அதாவது ஆன்மீக பயிற்சியின்போது நமது மனம்  எந்தவொரு இடையூறும் இல்லாமல், முற்றிலும் அமைதியாக இருக்க வேண்டுமென்று இந்து மதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  அடுத்தடுத்து பிரச்சனை.. வாழ்க்கையில் நிம்மதியே இல்லையா? 'உப்பு' வைத்து ஒரே '1' பரிகாரம் செய்ங்க!!  

44
தூக்கத்தை கெடுக்கும், கனவுகளை பாதிக்கும்:

வலுவான வாசனையானது இரவு நம்முடைய கனவுகளை பாதிக்கும். அதாவது இரவு நேரத்தில் விசித்திரமான அல்லது குழப்பமான கனவுகளை ஏற்படுத்தும். இந்து மதத்தில் கனவுகள் ஆன்மீக விஷயங்களை சொல்லு நாம் இரவில் வாசனை திரவியம் பயன்படுத்தினால் கனவுகள் தெளிவாக தெரியாது மேலும் அவற்றின் அர்த்தத்தையும் புரிந்து கொள்வது மிகவும் கடினமாக இருக்கும். மேலும் இந்து மதத்தில் இரவில் கடவுளை நினைத்து தியானம் செய்கிறான் இந்த நேரத்தில் வாசனை திரவியம் பயன்படுத்துவது நல்லதல்ல. இதனால் நம்முடைய கவனம் சிதறடிக்கப்பட்டு, வழிபாடும் தடைப்படும். எனவே இரவில் வாசனை திரவியம் ஏதும் பயன்படுத்தாமல் இருந்தால் உங்களை சுற்றி அமைதியான சூழல் உருவாகும்.

 

click me!

Recommended Stories