சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு தப்பி தவறி கூட இந்த '3' காரியங்களை செஞ்சிடாதீங்க! பணக்கஷ்டம் வரும்
இந்து மதத்தில் ஜோதிட சாஸ்திரத்தில் வாழ்வில் நடக்கும் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய பல விஷயங்களை அதில் எழுதப்பட்டுள்ளன என்று சொல்லுகின்றனர். அந்த வகையில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு செய்யக்கூடாத சில காரியங்கள் உள்ளன. அவற்றை தெரிந்தால் தெரியாமலோ செய்தால் கூட அதனால் பல பிரச்சனைகள் சந்திக்க நேரிடும் என்று சாஸ்திரங்களில் எழுதப்பட்டுள்ளது.
25
சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு செய்யக்கூடாத காரியங்கள்.
சூரியன் மறைந்த பிறகு அந்த மூணு காரியங்களை ஒருவர் செய்தால் லட்சுமி தேவி அவர் மீது கடுமையாக கோபமடைவாள். இதனால் அந்த நபருடைய நிதிநிலைமை மோசம் அடையும், வீட்டில் பிரச்சனைகள் அதிகரிக்கும். இது போன்ற பல காரியங்கள் நடக்கும். எனவே சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு எந்த மூன்று காரியங்களை செய்யவே கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
35
மாலை வேளையில் தூங்குவது:
பல சமயங்களில் சிலர் சூரியா அஸ்தமனத்திற்கு பிறகு அதாவது மாலை வேளையில் தூங்க விரும்புகிறார்கள். ஆனால் இது சாஸ்திரங்கள் படி நல்லதல்ல. உண்மையில், காலை மற்றும் மாலை லக்ஷ்மி தேவி வீட்டிற்கு வருவதால் அது மிகவும் மங்களகரமாக இருப்பதாக வேதங்கள் சொல்லுகின்றன. இந்து மதத்தில் மாலை வேளையில் லட்சுமி தேவி வீட்டிற்கு வரும் நேரம் என்று சொல்லப்பட்டுள்ளது எனவே இந்த நேரத்தில் ஒருவர் தூங்கினால், லட்சுமிதேவி அந்த நபர் மீது கோபமடைவாள். இதனால் வீட்டிற்கு வேறு வேண்டிய அதிர்ஷ்டம் திரும்பிவிடும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது. மேலும் இந்த நேரத்தில்தான் கடவுளுக்கு பிரார்த்தனை செய்யும் நேரம் என்பதால் இந்த நேரத்தில் யாராவது தூங்கினால் அந்த வீட்டில் வறுமை வரும்.
பல சமயங்களில் பலர் மாலையில் தான் வீட்டை துடைப்பது, சுத்தம் செய்வது, குப்பைகளை கொட்டுவது போன்ற விஷயங்களை செய்வார்கள். ஆனால் சாஸ்திரங்கள் படி, லட்சுமி தேவி மாலை வேலையில் தான் வீட்டிற்குள் நுழைவதால் இந்த நேரத்தில் இது போன்ற காரியங்களை செய்தால் லட்சுமி தேவி வீட்டை விட்டு வெளியேறி விடுவார் என்று நம்மப்படுகிறது. மேலும் இது வீட்டிற்கும் நல்லதாக கருதப்படுவதில்லை. எனவே சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு ஒருபோதும் வீட்டை துடைக்கவோ, சுத்தம் செய்யவோ வேண்டாம். இதனால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் உருவாகும்.
சூரிய அஸ்தமனதத்திற்கு பிறகு ஒருபோதும் யாருக்கும் பணத்தை கடனாக கொடுக்க வேண்டாம். ஏனெனில் மாலை நேரம் லட்சுமிதேவி வீட்டிற்கு வரும் நேரம் என்பதால், இந்த நேரத்தில் ஒருவருக்கு நீங்கள் பணத்தை கடனாக கொடுத்தால், லட்சுமிதேவி உங்கள் மீது கோபம் கொள்வாள். இதனால் வீட்டின் பொருளாதார நிலை மோசமாக பாதிக்கப்படும். அதுபோல நீங்களும் மாலை வேளையில் தவறுதலாக கூட யாரிடமும் பணத்தை வாங்க வேண்டாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த நேரம் லட்சுமி தேவியை வழிபட வேண்டிய நேரமாக இருப்பதால் பணத்தை வாங்கினாலோ அல்லது கொடுத்தாலோ லட்சுமி தேவியை வீட்டை விட்டு சென்றுவிடுவாள்.