
ஒரு மனிதன் பகல் முழுவதும் ஓயாமல் உழைத்து இரவில் நிம்மதியாக தூங்கினால் தான் அவன் ஆரோக்கியமாக இருக்க முடியும். சொல்லப்போனால், ஒருவர் 7-8 மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூட கூறுகிறார்கள். இதனால் உடலுக்கும் மனதுக்கும் போதிய ஓய்வு கிடைத்து, புத்துணர்ச்சியாக இருக்கும். எனவே தூங்கும் அறை எப்போதும் அமைதியாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆனால் தற்போது பலர் பணி சுமை, தூக்கமின்மை போன்ற பல காரணங்களால் இரவு ஆழ்ந்த தூக்கமில்லாமல் தவிக்கிறார்கள். எனவே, இரவு நிம்மதியாக தூங்குவது எப்படி என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது தெரியுமா?
வாஸ்து சாஸ்திரம் என்பது இந்து மதத்தில் பின்பற்றப்படும் ஒரு நம்பிக்கையாகும். இதில் பல்வேறு விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. சொல்லப்போனால் இந்து மக்களின் வாழ்க்கை வழிகாட்டியாக இது செயல்படுகிறது. ஒருவர் எந்த திசையில் தலை வைத்து தூங்க வேண்டும்? எந்த நிலையில் தூங்க வேண்டும் என்பதை பொறுத்து அவருக்கு இரவு நிம்மதியான தூக்கம் கிடைக்கும். அந்த வகையில், இப்போது இரவு ஆழ்ந்த தூக்கம் கிடைக்க வாஸ்து சாஸ்திரம் என்ன சொல்லுகிறது என்பதை பற்றி நீங்க பார்க்கலாம்.
இதையும் படிங்க: உங்க வீட்டு வாட்டர் டேங்க் இந்த திசையில் இருக்கா? அப்போ கண்டிப்பா உங்களுக்கு பணக்கஷ்டம் வரும்!
1. பூஜை அறையை போலவே இரவு தூங்கும் அறையும் சுத்தமாக இருந்தால் ஆழ்ந்த தூக்கம் வரும் ஒருவேளை உங்களது பெட்ரூம் சுத்தமாக இல்லாவிட்டால் தொற்று நோய், பண இழப்பு ஏற்படும் மற்றும் இரவு உங்களால் நிம்மதியாக தூங்க முடியாமல் போகும்.
2. அதுபோல உங்கள் வீட்டின் பெட்ரூம் கதவை வடக்கு அல்லது கிழக்கு பகுதி ஒட்டி வைக்கலாம் ஆனால் நடுப்பகுதியில் மட்டும் வைக்க வேண்டாம். அப்போதான் இரவு நல்ல தூக்கம் கிடைக்கும்.
3. வாஸ்துபடி நீங்கள் தூங்கும் பெட்ரூமில் மான், மாடு, புலி, சிங்கம் போன்றவற்றின் படங்கள் இருக்கவே கூடாது. அதற்கு பதிலாக அன்பை தூண்டும் ஓவியங்களை வைக்கலாம். இதனால் இரவு நிம்மதியாக தூங்க முடியும்.
இதையும் படிங்க: இந்த '5' பொருட்கள் உங்க வீட்ல இருக்கா? பணம் கையில் சேராது!!
4. வாஸ்துபடி, உங்கள் பெட்ரூம் சுவற்றின் வண்ணங்கள் நீளம், பிங்க், மஞ்சள் போன்ற நிறத்தில் தான் இருக்க வேண்டும். அதுபோல பெட்ரூமில் சீலிங் வெள்ளை நிறத்திலும், பெட்ரூமில் இரவு நேர விளக்கு சிவப்பு அல்லது ஊதா நிறத்தில் தான் இருக்க வேண்டும் அப்போது தான் உங்களால் இரவு நன்றாக தூங்க முடியும்.
5. தூங்கும் போது தவறான திசையில் தலை வைத்து தூங்கினால் உங்களது தூக்கம் பாதிக்கப்படும் மற்றும் உடல்நல பிரச்சனையும் ஏற்படும் என்று வாஸ்து சொல்கிறது. எனவே தெற்கு திசை, கிழக்கு திசை, மேற்கு திசை ஆகிய திசைகளில் தான் தூங்குவது நல்லது என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகிறது. மேலும் இந்த திசையில் தூங்கினால் தான் இரவு ஆழ்ந்த தூக்கமும் வரும்.
6. கிழக்கு திசையில் தலை வைத்து தூங்கினால், நேர்மறை ஆற்றல் வரும் மற்றும் இரவு நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
7. தெற்கு திசையில் தலை வைத்து வடக்கு திசை நோக்கி கால் நீட்டி தூங்கினால் வெற்றி, செல்வம், புகழ் உங்களைத் தேடி வரும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது.
8. மேற்கு திசையில் தலை வைத்து தூங்கினால் புகழ் கிடைக்கும் பணக்காரர்கள் ஆவீர்கள். ஆனால் எக்காரணம் கொண்டும் வடக்கு திசையில் தலை வைத்து தெற்கு திசையில் மட்டும் கால் நீட்டி தூங்க வேண்டாம். இதனால் பல வித பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
9. இரவு நிம்மதியாக தூங்க வாஸ்து படி நீங்கள் தூங்கும் அறையில் புத்தகத்தை படிக்க வேண்டாம்.
அதுமட்டுமின்றி செல்போன், லேப்டாப் போன்ற எந்தவித எலக்ட்ரானிக் பொருட்களையும் படுக்கைக்கு அருகில் வைக்க வேண்டாம்.
10. முக்கியமாக, தம்பதியர் பெட்ரூமில் வடகிழக்கு பகுதியில் தூங்க வேண்டாம். இல்லையெனில் பல உடல்நல பிரச்சனை ஏற்படும்.