
வீட்டின் முன் கோலம் போடுவது மகாலட்சுமிக்கு மிகவும் விருப்பமானது. கோலமிடாத வீட்டிற்கு மகாலட்சுமி வரமாட்டார் என்பது ஐதீகம். நாள்தோறும் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் மகாலட்சுமி தெருக்களில் உலா வருவதாக நம்பப்படுகிறது. அந்த நேரத்தில் யார் தங்கள் வீட்டை சுத்தம் செய்து கோலமிட்டு வைத்திருக்கிறார்களோ அவர்கள் வீட்டுக்கு மகாலட்சுமி வாசம் செய்ய வருவார். இதன் காரணமாகவே அதிகாலையில் வீட்டின் முன் கோலமிட வேண்டும் என நம் முன்னோர் சொல்லிச் சென்றுள்ளனர். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. முறையாக நேரம் எடுத்து கோலமிடாமல் கடமைக்கு மக்கள் கோலமிட தொடங்கிவிட்டனர். ஆனால் இது தவறான அணுகுமுறை. கோலமிடுவது கூட சாஸ்திரம் தான்.
சில கோலங்களால் உங்கள் வாழ்க்கையே அலங்கோலமாகிவிடும். வீட்டில் கடன் சுமை அதிகமாகிவிடும். சிலர் கடன் தொழில் இருந்து விடுபட பல முயற்சிகள் எடுப்பார்கள். ஆனால் அவர்களுக்கு கடன் தொடர்ந்து கொண்டே இருக்கும். சிலர் மேலும் மேலும் கடன் வாங்காமல் வரவுக்கு மேல் செலவு செய்யாமல் இருக்க வேண்டும் என எவ்வளவு முயன்றாலும் அவர்களுடைய கடன் சுமை குறையவே குறையாது. கடன் நம்முடைய கர்மாவில் ஒரு பகுதியாகும். பலர் இந்தக் கடன் பிரச்சனையால் நிம்மதி இழந்து அவதிப்படுகின்றனர். இரவில் தூக்கமின்றி பகலில் நிம்மதியின்றி தவிப்பவர்கள் ஏராளமானார்.
இதையும் படிங்க: பெண்கள் இரவு தலை குளிக்கக் கூடாதுனு சாஸ்திரம் சொல்றது எதுக்கு தெரியுமா?
கடனுக்கு கோலம் காரணமா?
சிலர் கடனை குறித்து கவலைப்படாமல் இருந்தாலும், பலர் கடனால் மனவேதனை அடைகின்றனர். இப்படி குவியும் கடனை தீர்க்க நீங்கள் கோலமிடும் விதத்தை மாற்ற வேண்டும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை கோலங்களும் உங்களுடைய கடன் சுமைக்கு ஒரு காரணம். உங்களுடைய கடன் சுமை குறைந்து வீட்டில் செல்வம் பெருக வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் நாள்தோறும் கோலம் போடுவது அவசியம். உங்களுடைய வீட்டை சுத்தம் செய்து காலையிலும், மாலையிலும் கோலம் போடுவதை பழக்கப்படுத்துங்கள்.
இதையும் படிங்க: Pongal Pulli Kollam Designs 2025 : பொங்கலோ.. பொங்கல்.. வித விதமான புள்ளி கோலங்கள் டிசைன்கள் இதோ!
எப்படி கோலம் போட வேண்டும்?
வீட்டை அழகுபடுத்த அல்ல, செல்வத்தின் கடவுள் மகாலட்சுமியின் அருளுக்காக தான் கோலம் போட வேண்டும். அரிசி மாவில் கோலமிட்டால் ஈ, எறும்புகளின் பசியாறும். இந்த முறையில் பச்சரிசி மாவில் கோலம் போடுங்கள். ஆனால் சுண்ணாம்பு தூளில் கோலம் போட்டால் உங்களுக்கு பயனும் கிடையாது. கோலமிடுவதின் நோக்கமே ஓரறிவுள்ள ஜீவன்களுக்கு சாப்பாடு கொடுப்பது தான். நீங்கள் காலையில் பச்சரிசியில் கோலமிட்டால் அன்றைய தினம் மாலை வேளைக்குள் எறும்புகள் மற்ற பூச்சிகள் பசியாறும். சுண்ணாம்பு பொடியில் கோலமிட்டால் அதில் இப்படி ஒன்று நடக்கவே வாய்ப்பில்லை. மகாலட்சுமியும் உங்கள் வீட்டுக்கு வரப்போவதில்லை. பிறகெப்படி கடன் தீரும்?
பச்சரிசி கோலம்:
சிலர் பச்சரிசி மாவில் கோலமிடுவது தங்களுக்கு வசப்படவில்லை என்பார்கள். அவர்கள் அரிசியை அரைக்கும் போதே கோலமாவு பதத்தில் அரைக்க வேண்டும். சற்று கொரகொரப்பாக அரைப்பது கோலமிட வசதியாக இருக்கும். இந்த மாவில் கோலமிடுவது தான் உங்களுடைய கர்ம வினை குறைந்து கடன் பிரச்சனை தீர உதவியாக இருக்கும். உங்கள் பாவத்தை நீங்கள் அறிந்தும், அறியாமலும் செய்யும் தர்ம பலன்களை கொண்டு குறைக்க முடியும். பச்சரிசி மாவில் கோலம் இடுவது உங்களுக்கு தெரியாமலே பல ஜீவராசிகளுக்கு உணவாகிறது. இதன் பலனாக உங்களுடைய கடன் சுமை குறையும். காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும் கோலமிட்டால் பூரணமாக கிடைக்கும். அறிவியல் ரீதியாக கூட நீங்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து கோலமிட்டால் உடல், உள்ள ஆரோக்கியம் மேம்படும்