Bhogi Festival 2025 in Tamil
போகி பண்டிகை என்பது பொங்கலுக்கு முந்தின நாள், அதாவது மார்கழி மாதத்தின் கடைசி நாளில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். போகி பண்டிகை நாளில் பழைய பொருட்களை எரிப்பது வழக்கம். அதாவது பழையன ஒழிந்து புதியவை வருவது தான் போகி. இந்தியாவின் தென் மாநிலங்களில் தான் இந்த பண்டிகை முதன்மையாக கொண்டாடப்படுகிறது. இந்நாள் தான் கடவுளான இந்திரனுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த பண்டிகை நாளில் மக்கள் தங்களது வீட்டில் தோரணங்கள் கட்டுவது, வீட்டின் முன் அழகிய கோலங்கள் போடுவது போன்ற பல விஷயங்களை பின்பற்றுவார்கள். தமிழ்நாட்டில் பொங்கல் நான்கு நாட்கள் கொண்டாடப்படும். அதில் முதல் நாளில் தான் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்போது போகி பண்டிகை கொண்டாடப்படுவது ஏன்? அந்நாளில் பழைய பொருட்களை ஏன் தீயில் எரிக்கிறார்கள் என்பதற்கான காரணங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Bhogi Festival 2025 in Tamil
போகி பண்டிகை கொண்டாடுவது ஏன்?
மார்கழி மாதம் தமிழ் மாதத்தில் ஒன்றாகும். இந்த மாதத்தில் கடைசி நாள் என்று அதாவது பொங்கல் அறுவடை திருவிழாவின் முதல் நாளில் தான் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் தென் மாநிலங்களில், அதாவது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இந்த பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும். பழையன ஒழிந்து புதியன வருவது தான் போகி பண்டிகையின் நோக்கமாகும். இந்த பண்டிகை நாளில் பழையன மற்றும் பயனற்ற பொருட்களை வீட்டை விட்டு அப்புறப்படுத்தப்படும். இப்படி அழிந்து போகும் பண்டிகைக்கு தான் நம்முடைய முன்னோர்கள் 'போகி' என்று பெயர் வைத்தனர்.
இதையும் படிங்க: உங்க வீட்டு வாட்டர் டேங்க் இந்த திசையில் இருக்கா? அப்போ கண்டிப்பா உங்களுக்கு பணக்கஷ்டம் வரும்!
Bhogi Festival 2025 in Tamil
போகியில் பழைய பொருள்களை எரிப்பது ஏன்?
போகி பண்டிகை நாளில் பழைய பொருட்களை எரிப்பது வழக்கம். போகி பண்டிகை என்பது கடவுள் இந்திரனுக்கு வழிபாடு செய்ய வேண்டிய நாள். போகி பண்டிகை நாளில் வீட்டில் இருக்கும் பழைய மற்றும் பயனற்ற பொருட்களை தீயில் எரிப்பது வழக்கம். வீட்டில் இருக்கும் பொருட்களை மட்டுமல்ல, மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும் நீக்க வேண்டும் என்பதுதான் இதில் மறைந்திருக்கும் தத்துவம். 'பழையன கழிதல்; புதியன புகுதல்' என்பதற்கு ஏற்றார் போல, பழைய பொருட்களை மக்கள் தீயிட்டு எரித்து போகி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். பண்டிகை நாளில் நம்முடைய பித்ருக்கள் வீட்டிற்கு வருவார்கள் என்று சாஸ்திரம் சொல்லுகின்றது. எனவே அவர்களுக்கு பிடித்த உணவுகள் ஆடைகளுடன், வெற்றிலை, தேங்காய், பாக்கு, வாழைப்பழம் ஆகியவற்றை படைத்து தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கத்தில் உள்ளது.
Bhogi Festival 2025 in Tamil
பொதுவாக உங்களுக்கு அனைவரது வீட்டிலும் வெள்ளையடித்து, சுத்தம் செய்வது வழக்கம். எனவே அப்போது வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை கட்டி ஒதுக்கி வைத்து, அதை போகி பண்டிகை என்று இருப்பார்கள். பிறகு வீட்டை நன்கு சுத்தம் செய்து வீட்டினுள் மற்றும் வெளியில் கோலம் போட்டு பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக தான் போகி பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
2025 போகி பண்டிகை எப்போது?
இந்த 2025 ஆம் ஆண்டில் போகி பண்டிகையானது ஜனவரி 13ஆம் தேதி திங்கள்கிழமை அன்று கொண்டாடப்படும்.
இதையும் படிங்க: பெண்கள் இரவு தலை குளிக்கக் கூடாதுனு சாஸ்திரம் சொல்றது எதுக்கு தெரியுமா?
Bhogi Festival 2025 in Tamil
போகி பண்டிகையின் பூஜை மற்றும் படையல்:
போகி பண்டிகை அன்று வீட்டின் முன் நிலைக்கு மஞ்சள் பூசி, திலகமிட்டு மா இலையில் தோரணம் கட்டுவார்கள். பிறகு வாழைப்பழம், வெற்றிலை, குங்குமம், பாக்கு, தேங்காய் வைத்து கற்பூரம் ஏற்றி குலதெய்வத்தை வழிபட்டு வணங்குவார்கள். முக்கியமாக போகி பண்டிகை நாளில் வடை,பாயாசம், சிறுதானியங்கள், பருப்பு வகைகள் போன்ற பல வகையான உணவுகளை சமைத்து படையலிட்டு, நிலத்திற்கு செழிப்பை கொடுக்கும் மழைக்கு நன்றி செலுத்தி வணங்குவார்கள்.
குறிப்பு: போகி நாளில் வீட்டில் தேவையற்ற பொருட்களை எரிக்கப்படுவதால் காற்று மாசுபாடு மேலும் அதிகரிக்கும் என்பதால் பிளாஸ்டிக், டயர்கள் போன்றவற்றை எரிக்காமல் நம்முடைய சுற்றுச்சூழலை காத்து, மாசில்லாத போகி பண்டிகையை கொண்டாட அனைவரும் முயற்சி செய்யுங்கள்.