இரவில் தலைக்கு குளிக்க கூடாது என்பதற்கான அறிவியல் காரணங்கள்:
- இரவு நேரத்தில் பெண்கள் தலைக்கு குளித்து அவர்கள் அப்படியே ஈரமான கூந்தலுடன் தூங்க செல்லும் போது முடி உடையும் அபாயம் அதிகரிக்கும் முக்கியமாக இரவில் நேரத்தில் தலைக்கு குளிப்பது முடி மற்றும் அதன் வேர்கள் இரண்டையும் பலவீனப்படுத்தும்.
- ஈரமான தலையுடன் தூங்கினால் முடி உதிர்வதற்கு வழிவகுக்கிறது. அதுபோல நான் தூங்கும் போது புரண்டு படுப்பதால் தலைமுடியில் சிக்கு விழுகிறது. இதனால் முடி உதிர்வு அதிகரிக்கும் மற்றும் முடி உடையும். இதனால்தான் ஈரத் தலையுடன் தூங்க கூடாது என்று பெரியவர்கள் அடிக்கடி சொல்வார்கள்.
- அதுமட்டுமின்றி ஈரமான தலைமுடியுடன் தூங்கினால் தலையில் பூஞ்சை வளர்ச்சி வேகமாக அதிகரிக்கும் இதன் காரணமாக தலையில் அலர்ஜி, பொடுகு பிரச்சனை ஏற்படும. இது தவிர ஈர தலையுடன் தூங்கும் போது தலைவலி, சளி, இருமல், காய்ச்சலுக்கு வழிவகுக்கும்.
மேலே சொன்ன இந்த காரணங்களால் தான் இரவு நேரத்தில் தலைக்கு குளிப்பது நல்லதல்ல என்று சொல்லப்படுகின்றது.