Pongal 2025 : இந்த ஆண்டு பொங்கல் வைக்க நல்ல நேரம் இதுதான்!!

First Published | Jan 10, 2025, 12:51 PM IST

Pongal 2025  : இந்த ஆண்டு பொங்கல் வைக்க உகந்த நேரம் எது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

pongal festival 2025 in tamil

பொங்கல் பண்டிகை தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். பொங்கல் பண்டிகை ஒவ்வொரு நாளும் தை மாதத்தில் தான் கொண்டாடப்படும். அதுவும் நான்கு நாட்கள் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும். பொங்கல் பண்டிகையின் சிறப்பு என்னவென்றால், பானையில் வைக்கப்படும் பொங்கலும், கரும்பும் தான். ஆடியில் விதைத்த நெல்லை தையில் அறுத்து அதனுடன் வெல்லம் சேர்த்து புது பானையில் வைத்து பொங்கலிட்டு இயற்கை வளங்களுக்கு நன்றி தெரிவித்து படைத்துக் கொண்டாடுவார்கள். இதைதான் அறுவடை திருநாள் என்பார்கள். பொங்கல் பண்டிகைக்கு முன் வீட்டை சுத்தம் செய்து கோலமிட்டு தோரணங்கள் கட்டி கொண்டாடுவது வழக்கம்.

pongal festival 2025 in tamil

பொங்கல் பண்டிகை வரலாறு:

தமிழ் கலாச்சாரத்தின் படி, பொங்கல் பண்டிகையானது சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக உருவானது. அதாவது, அந்த காலத்தில் தமிழர்களின் பிரதான வேலை எதுவென்றால் அது விவசாயம் தான். விவசாயிகளின் விவசாயத்திற்கு சூரிய பகவான் உதவியதால், சூரிய பகவானுக்கும் இயற்கை வளங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக தான் புது பானையில் அறுவடை செய்த நெல்லில் பொங்கலிட்டு அதை சூரிய பகவானுக்கு படைத்து வழிபாடு செய்து வந்தார்கள். காலப்போக்கில் அந்த பழக்கமானது மக்களால் பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:  பொங்கல் ஸ்பெஷலாக டிவியில் இத்தனை புதுப்படங்கள் ஒளிபரப்பாகிறதா? முழு லிஸ்ட் இதோ

Tap to resize

pongal festival 2025 in tamil

நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல்: 

பொங்கல் பண்டிகையானது நான்கு நாட்கள் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. எனவே அவை எப்போது என்றும், கொண்டாடப்படுவதற்கான காரணம் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளன..

போகி பண்டிகை - 13 ஜனவரி 2025 திங்கள்கிழமை

தைப்பொங்கல் - 14 ஜனவரி 2025 செவ்வாய்க்கிழமை

மாட்டுப் பொங்கல் - 15 ஜனவரி 2025 புதன்கிழமை

காணும் பொங்கல் - 16 ஜனவரி 2025 வியாழன் கிழமை.

இதையும் படிங்க:  9 நாட்கள் தொடர் விடுமுறை.! பொதுமக்களுக்கு குட் நியூஸ் சொன்ன தெற்கு ரயில்வே

pongal festival 2025 in tamil

போகி பண்டிகை:

தைப்பொங்கலுக்கு முந்தின நாள் தான் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையானது மார்கழி மாதத்தின் கடைசி நாளில் கொண்டாடப்படும். விவசாயத்திற்கு உதவிய கடவுள் இந்திரனை இந்நாளில் வழிபட்டு வணங்குவார்கள். இந்நாளில் தான் அறுவடை செய்த அரிசியை வீட்டிற்கு மக்கள் கொண்டு வருவார்கள். முக்கியமாக போகி பண்டிகை நாளில் தான் வீட்டில் இருக்கும் தேவையில்லாத மற்றும் பழைய பொருட்களை தீயில் எரிப்பார்கள்.

தைப்பொங்கல்: 

உங்களின் இரண்டாவது நாளில்தான் தைப்பொங்கல் வருகிறது. இதுதான் முக்கியமானது. ஏனெனில் இதுதான் தமிழ் மாதமான தை மாதத்தின் முதல் நாள் ஆகும். எனவே இந்நாளில் மக்கள் அறுவடை செய்த அரசியை பொங்கலுக்கு சூரிய பகவானுக்கு படைத்து நன்றி சொல்வார்கள். காலை 7.55 முதல் 9.29 வரை பொங்கல் வைக்க உகந்த நேரம் ஆகும்.

pongal festival 2025 in tamil

மாட்டுப் பொங்கல்:

தை இரண்டாம் நாளில் தான் மாட்டுப் பொங்கல் வருகிறது. விவசாயிகளின் விவசாயத்திற்கு உதவிய மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தான் இந்த பொங்கல் கொண்டாடப்படுகிறது. மாட்டுப் பொங்கல் நாளில் மாடுகளை குளிப்பாட்டி அலங்கரித்து, அவற்றிற்கு பொங்கல் வைத்து படைத்து வழிபடுவார்கள். மாட்டுப் பொங்கல் வைக்க உகந்த நேரம் காலை 9.30  முதல் மதியம் 10.30 மணி வரை ஆகும். அதுபோல மாலை 4:30 முதல் 5 30 மணி வரை மாட்டுப்பொங்கல் வைக்கலாம்.

காணும் பொங்கல்:

காணும் பொங்கலானது தை மாதத்தின் மூன்றாவது நாளில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இந்த பொங்கல் பண்டிகையானது ஓயாமல் உழைத்த விவசாயிகள் தங்களது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்காக கொண்டாடப்படும் பண்டிகையாகும். எனவே இந்நாளில் பலர் தங்களது குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை செலவிடுவார்கள். முக்கியமாக இந்நாளில் தான் தமிழ்நாட்டில் பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடக்கும்.

Latest Videos

click me!