உடைந்த நாற்காலி:
உடைந்த நாற்காலி வீட்டில் இருந்தால் நெகடிவ் எனர்ஜியை ஈர்க்கும் என்று வாஸ்து சொல்லுகின்றது. இதனால் வீட்டில் நிதி பற்றாக்குறை பண இழப்பு தேவையற்ற செலவுகள் ஏற்படும். எனவே இவற்றை தவிர்க்க உடைந்த நாற்காலியை வீட்டிலிருந்து தூக்கி போடுங்கள்.
காய்ந்த செடிகள்:
உங்கள் வீட்டின் உள் அல்லது வெளியே காய்ந்த அல்லது பட்டு போல செடிகள் இருக்கக் கூடாது. ஏனெனில் இவை உங்கள் வீட்டிற்கு துரதிர்ஷ்டம், பணம் கஷ்டத்தை கொண்டு வரும். எனவே இவற்றை வீட்டிலிருந்து உடனடியாக அகற்றி, புதிய செடிகளை வைக்கவும். இதனால் வீட்டில் அதிர்ஷ்டம் பெருகும், சந்தோஷம் நிலைத்திருக்கும், பணம் குவியும்.
பெட்ரூமில் இருக்கும் பொருட்கள்:
உங்கள் படுக்கைக்கு அருகில் செருப்பு, துணிகள், புத்தகம், நகைகள், பணம் போன்ற எதையும் வைக்கக்கூடாது. இவை துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். எனவே உங்கள் படிக்கைக்கு அருகில் இதுபோன்ற எந்த ஒரு பொருட்களையும் வைக்க வேண்டாம்.