வற்றாத பணவரவை பெற! வீட்டு ஹாலில் இந்த 1 விஷயம் பண்ணுங்க! வாஸ்து தோஷங்கள் விலகி பணம் பெருகும்!!

First Published | Apr 17, 2023, 9:49 AM IST

Vastu tips for good health: குடும்பத்தில் உள்ள அனைவரின் ஆரோக்கியம் மேம்பட வாஸ்துபடி என்னெவெல்லாம் செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் காணலாம். 

வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அடிக்கடி நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். காரணமே இல்லாமல் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வரும். இப்படி நடப்பது வாஸ்து தோஷம் இருப்பதற்கான அறிகுறிகளாகும். வாஸ்துவின் சில வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், நீங்கள் ஆரோக்கியமான உடலைப் பெறலாம், உங்கள் வீட்டுச் சூழலை இனிமையாகவும் அழகாகவும் மாற்றலாம். 

ஆரோக்கியமான வாழ்வுக்கு வாஸ்து குறிப்புகள்!! 

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் சேதம் இருக்கக் கூடாது. உங்கள் வீட்டின் பிரதான கதவு உடைந்திருந்தாலோ அல்லது ஏதேனும் குறைபாடுகள் இருந்தாலோ, அதை விரைவில் சரிசெய்து விடுங்கள். வாஸ்து படி, இது குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். வீட்டில் சண்டை, சச்சரவுகள் அதிகமாக இருக்கும். எனவே உங்கள் வீட்டின் பிரதான கதவை சுத்தமாகவும், நேர்த்தியாகவும் வைத்திருங்கள்.

Tap to resize

இந்த பொருட்களை வீட்டில் வைக்காதீர்கள்!! 

உடைந்த கண்ணாடி, உடைந்த கடிகாரம், உடைந்த பொருட்கள், குப்பைகள் ஆகியவற்றை வீட்டில் வைக்காதீர்கள். இது குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. பணம் தொடர்பான விஷயங்களை எதிர்மறையாகவும் பாதிக்கிறது. வீட்டில் தேவையற்ற பொருட்கள் இருக்கக்கூடாது. மாலை வேளையில் வீட்டில் கற்பூரத்தை ஒளிர விடுவதன் மூலம் வீட்டில் ஒரு நேர்மறையான சூழலை உருவாக்குவதுடன் ஆரோக்கியமான உடலும் கிடைக்கும். 

பூஜையறை இந்த இடத்தில் இருக்க வேண்டும்.. 

வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டின் வடகிழக்கு மூலை மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஏனென்றால் அது கடவுளின் சரியான இருப்பிடம் என்று நம்பப்படுகிறது. உங்கள் வீட்டின் பூஜையறை இந்த திசையில் இருந்தால் அது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த திசையில் பூஜை இருந்தால், நீங்கள் ஆரோக்கியமான உடலைப் பெறுவீர்கள். வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கும். பூஜையறையை சரியான திசையில் வைப்பதால் வீட்டில் நேர்மறை ஆற்றலைத் தக்கவைத்து, கடவுள் அருளால் ஆரோக்கியத்தைப் பெறுவார். 

இதையும் படிங்க: அட்சய திருதியை நாளில் மறந்தும் செய்யக்கூடாத தவறுகள்! மீறினால் லட்சுமியின் கோவம்! வீட்டில் வறுமை உண்டாகும்!!

இந்த இடத்தில் கனமான பொருட்களை வைக்க வேண்டாம்!! 

வீட்டின் நடுவில் (பிரம்மஸ்தலம்) கனமான பொருட்களையோ அல்லது மரச்சாமான்களையோ வைக்க கூடாது. இந்த இடம் வாஸ்துபடி, பிரம்ம ஸ்தலமாக கருதப்படுகிறது. இந்த இடம் எப்போதும் காலியாகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டும். இந்த இடத்தில் கனமான பொருட்களை வைத்திருப்பது சுகாதாரக் கண்ணோட்டத்தில் நல்லதல்ல. இது குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவைக் கொண்டிருக்கிறது. எனவே அதை அகற்றி, பிரம்மஸ்தலத்தை சுத்தமாக வைத்திருங்கள். இதனுடன் வீட்டில் தெய்வத்தின் சிலை எப்போதும் தெற்கு திசையில் இருக்க வேண்டும்.  

ஸ்படிக உருண்டை!! 

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீடு அல்லது அலுவலகத்திற்குள் ஒரு ஸ்படிக உருண்டையை (crystal ball ) வைத்தால் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இது உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தருகிறது. இது எதிர்மறை ஆற்றலை உறிஞ்சி, உங்கள் வீட்டையும் அலுவலகத்தையும் துரதிர்ஷ்டத்திலிருந்து விடுவிக்கிறது. வீட்டின் பிரதான கதவுக்கு அருகிலும் ஸ்படிக உருண்டையை வைக்கலாம். இதனால் வீட்டில் நேர்மறை ஆற்றல் இருக்கும். பணம், தானியங்களுக்கு பஞ்சம் இருக்காது. இந்த வாஸ்து குறிப்புகளை பயன்படுத்தி நலம் வாழுங்கள். 

இதையும் படிங்க: இந்த டிராகன் பழம் 1 சாப்பிட்டால்.. உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு, இயற்கையாகவே குறையுதே!!

Latest Videos

click me!