வீட்ல விநாயகர் சிலைய இங்க வச்சு பாருங்க! பணமும், அதிர்ஷ்டமும் உங்க வீட்டை தேடி வரும்!

First Published | Apr 16, 2023, 11:02 AM IST

வீட்டில் பணக் கஷ்டம் வராமல் இருக்க எந்தெந்த பொருட்களை வைக்க வேண்டும் என்பதனை இந்த பதிவில் காணலாம்.

நமக்கு எண்ணற்ற கஷ்டங்கள் இருந்தாலும் பணம் ஒன்று இருந்தால் போதும் கொஞ்சம் தைரியமாக இருக்கலாம். நாம் எதிர்கொள்ள வேண்டிய பாதி பிரச்சினைகளுக்கு பணம் இன்றியமையாததாக உள்ளது. எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும் ஏன் எங்களிடம் மட்டும் பணம் தங்குவதில்லை ? என்று பலரும் நொந்து போய் தான் உள்ளார்கள்.

இப்படி புலம்புபவர்களுக்கு ஒரு எளிய ஆன்மீக பரிகாரம் தான் பார்க்க உள்ளோம். இது மிகவும் எளிய அதே நேரத்தில் மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரம் ஆகும். இந்த 5 பொருட்கள் உங்கள் வீட்டில் இருக்கும் போது வீட்டில் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரவே வராது என்பது ஐதீகம். நீங்களும் இந்த பொருட்களை வாங்கி உங்களது வீட்டில் வையுங்கள்.

வீட்டில் பணக் கஷ்டம் வராமல் இருக்க எந்தெந்த பொருட்களை வைக்க வேண்டும் என்பதனை இந்த பதிவில் காணலாம்.

விநாயகர் சிலை:

வழக்கமாக நாம் எந்த ஒரு நல்ல செயலையும் துவக்கும் முன்பும் முதலில் விநாயகரை வணங்கிய பின்பு தான் அந்த செயலை தொடங்குவோம்.

அப்படிப்பட்ட விநாயகர் சிலையை அதிலும் குறிப்பாக நடனம் ஆடுவது போன்று இருக்கும் விநாயகர் சிலையை வாங்கி உங்கள் நிலைவாசல் கதவை இருக்குமாறு திசையில் வைக்க வேண்டும். இவ்வாறு வைத்தால் வீட்டின் பண வரவானது நாளுக்கு நாள் அதிகரிக்குமே தவிர ஒரு நாளும் பணக்கஷ்டம் என்ற வார்த்தை கூட உங்கள் வாயில் இருந்து வராது .

Tap to resize

புல்லாங்குழல் :

பொதுவாக நம்மிடம் பணம், பொன் ,பொருள் போன்றவை சேர வேண்டும் எனில் முதலில் நமது வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் இருக்க வேண்டும் என்பார்கள். அப்படி லக்ஷ்மி கடாட்சம் இருப்பவர்களுடைய வீட்டில் வற்றாத செல்வம் இருந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை.

அப்படி லட்சுமி கடாட்சத்துடன் இருக்கக்கூடிய பல பொருட்களில் புல்லாங்குழலும் ஒன்று . இதனை உங்கள் வீட்டில் வைத்திருக்கும் போது உங்கள் வீட்டில் வாஸ்து சம்பந்தமான பிரச்சனைகள் இருபுற அதனை விலக்கி சரி செய்வதோடு ,பண வரவையும் அதிகரிக்க செய்யும்.

guberar statue

சங்கு:

பொதுவாக ஒரு சங்கை எடுத்து காதில் வைத்து கேட்டால் அது ஒரு வித ஒலி தருவதை நாம் கேட்டு இருப்போம். அப்படியான ஒலி சங்கில் இருந்து வெளிவருவதை வீட்டில் இருக்கும் தீய சக்திகளை அழிக்கும் தவிர லக்ஷ்மி கடாட்சம் நிறைந்து காணப்படும் என்பது சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. ஆக இந்த சங்கினை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் உங்கள் வீடு செல்வ செழிப்பதோடும், வற்றாத செல்வங்களோடும் வீட்டில் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ்வீர்கள்.

குபேரர் சிலை:

இந்த உலகில்இருக்கும் அனைத்து செல்வங்களுக்கும் சொந்தக்காரி என்றால் அன்னை மஹாலக்ஷ்மி தான் . அனைத்து செல்வங்களையும் பாதுகாக்கும் அதிபதி குபேரர் ஆவார்.
அப்படி செல்வங்களை பாதுகாக்கும் அதிபதியான குபேரர் சிலை ஒன்று வாங்கி உங்கள் வீட்டிற்கு வடக்கு திசையில் இருக்குமாறு வைக்கும் போது வீட்டில் பணம் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து சகல ஐஸ்வர்யங்களும் பெற்று நீங்கள் வாழ்வீர்கள்.

If You Worship That Coconut Like This, Your Luck Will Change

தேங்காய் :

நாம் செய்யும் எந்த ஒரு பூஜையிலும் தேங்காய் முதலில் இருக்கக்கூடிய மங்களகரமான பொருள் ஆகும். தேங்காயானது நேர்மறை சக்தியினை வெளியிடும் தன்மை பெற்றது. இப்படியான தேங்காயை நீங்கள் வேலை செய்யும் இடத்திலும் ,உங்களது வீட்டிலும் இருக்குமாறு செய்ய வேண்டும். வாரத்தில் 2 முறை தேங்காயை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இப்படி எப்போதும் தேங்காய் வீட்டில் இருக்கும் பட்சத்தில் பணப் பிரச்சினை எட்டிக் கூட பார்க்காது தவிர பணம் உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் வந்து கொண்டே இருக்கும்.

சப்பாத்திக்கு எப்போதும் குருமாவே செய்து சாப்பிடாதீங்க! இந்த மாதிரி சோயா கீமாவையும் 1 தடவ செய்து பாருங்க!

Latest Videos

click me!