அட்சய திருதியை அன்று செல்வத்தின் தெய்வமான மகாலக்ஷ்மியையும், மகா விஷ்ணுவையும் வணங்கினால் நல்ல பலன்கள் கிடைக்கும். ஆனாலும் அட்சய திருதியை நாளில் தவறுதலாகக் கூட சில காரியங்களை செய்யக்கூடாது. அந்த விஷயங்களை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
அட்சய திருதியை நாளில் செய்யக்கூடாதவை!!
மகாலட்சுமிக்கு துளசி இலைகளை சமர்ப்பிக்கக்கூடாது என்பது ஐதீகம். இதனால் லட்சுமிக்கு கோபம் வரும் என சொல்லப்படுகிறது.
அட்சய திருதியை நாளில் யாரையும் அவமரியாதை செய்யக்கூடாது. உங்கள் எண்ணங்களும், நடத்தையும் யார் மரியாதைக்கும் பாதிப்பு உண்டாக்கக் கூடாது. யார் மனதையாவது புண்படுத்தினால் மகாலட்சுமிக்கு நம் மீது கோபம் வரும்.