வீட்டில் வலம்புரி சங்கு வைத்து இப்படி வழிபட்டால், நீங்க கடவுளிடம் கேட்கும் வரம் எல்லாம் இரட்டிப்பா கிடைக்கும்!

First Published | Apr 15, 2023, 12:07 PM IST

வலம்புரி சங்கை வீட்டில் புதைத்து வைத்து வழிபட்டால் எண்ணி பார்க்காத பல நன்மைகளை பெற முடியும். 

வலம்புரி சங்கை பூஜை அறையில் வைத்து வழிபட்டால் நன்மைகள் பெருகும். ஆனால் சங்கு வழிபாட்டில் சில விஷயங்களை சேர்த்து கொண்டால் நினைத்த காரியங்கள் எல்லாமே நல்லபடியாக நடக்கும். இந்த வழிபாட்டில் கர்ப்பப்பேழைக்கு முக்கிய பங்குள்ளது. அதென்ன கர்ப்பப்பேழை என தோன்றுகிறதா? நண்டு வலையில் உள்ள மண், யானை காலடி மண், குதிரை காலடி மண் ஆகிய மூன்றுமே கலந்தது தான் கர்ப்பப்பேழை என்பார்கள். இந்த 3, வகை மண்ணையும் எடுத்து அதனுடன் தண்ணீர் அல்லது பன்னீரை கலந்து பிசைந்து கொள்ளுங்கள். 

வலம்புரி சங்கு எப்படி பயன்படுத்த வேண்டும்? 

வலம்புரி சங்கில் வெள்ளி அல்லது தங்க நாணயத்தை வைக்க வேண்டும். இதனுடன் அதர்வண தெய்வ குங்குமத்தை வைக்க வேண்டும். இங்கு அதர்வண தெய்வம் என்றால் வராஹி அம்மன், காளியம்மன் போன்ற உக்ரமான தெய்வங்களை சொல்லும் பதமாகும். குங்குமம் இட்ட பின்னர் சங்கை மூடும் அளவில் பிசைந்த மண்ணை பூசி வைக்க வேண்டும்.

அடுத்து நம் வீட்டுக்கு வெளியே (சுற்றுசுவருக்குள்) வடகிழக்கு மூலையில் 2 அடி அகலமும், 2 அடி ஆழமும் இருக்குமாறு ஒரு குழியை பறித்து கொள்ளுங்கள். அங்கு நாம் மூடி வைத்துள்ள சங்கை புதைக்க வேண்டும். இப்படி சொந்த நிலமோ, வீட்டிக்கு வெளியே குழியோ தோண்ட முடியாத நபர்கள், அப்பார்ட்மெண்டில் வசிப்பவர்கள் செப்பு பாக்ஸ், மண்பானை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினை ஏற்பாடு செய்து சங்கை போட்டு மூடி, வீட்டினுள் வடகிழக்கு மூலையில் வைத்தால் போதும். 

Tap to resize

சங்குடன் எதை வைக்க வேண்டும்? 

நாட்டு மருந்து கடைகளில் ஹோம திரவிய செட் வாங்கி அதை சங்கின் மேல் வைத்து விடுங்கள். இத்துடன் சிவனுக்கு பிடித்த வில்வம், துளசியை போட்டு மண்ணை மூடி கொள்ளுங்கள். புதைத்ததோடு முடிந்து விடவில்லை. இந்த இடத்தில் நாள்தோறும் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். இப்படி செய்யாவிட்டால் துளசி மாடத்தை அங்கு உருவாக்கலாம். துளசி வீட்டில் இருப்பது ரொம்ப விசேஷமானது. நாள்தோறும் துளசி பூஜை செய்ய வேண்டும். குறிப்பாக இந்த இடம் எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும். 

இதையும் படிங்க: உப்புடன் 4 கிராம்பு போட்டு வைத்தால்.. அதுவும் வீட்டின் இந்த இடத்தில் வைத்தால், பணம் அதிகம் குவியுமாம்!!

நாள்தோறும் தூப ஆராதனை செய்ய வேண்டும். கோயில்களில் கொண்டு வரும் அபிஷேக தீர்த்தத்தை அந்த இடத்தில் இங்கு தெளிக்கலாம். இதையெல்லாம் நம்பி நாள்தோறும் செய்யும்போது நம்முடைய வீட்டில் செல்வம் பெருகும். பில்லி சூனியம் ஏவல் மாதிரியான எதிர்மறை சக்திகள் நம் வீட்டை அணுகாது. நமது தர்மங்களின் பலன்கள் பல மடங்கு பெருகி கொண்டே இருக்கும். வாழ்வில் வெற்றிக்கு மேல் வெற்றியை பெற்று சிறந்து விளங்குவோம். வலம்புரி சங்கை நாம் பிரதிஷ்டை செய்தால் முடிவில்லா நன்மைகளை பெறலாம். 

இதையும் படிங்க: பாதங்களில் ஏற்படும் வீக்கம் இந்த நோயின் அறிகுறியா!! அலட்சியம் செய்தால் என்ன ஆகும் தெரியுமா?

Latest Videos

click me!