குருப் பெயர்ச்சி 2023: மேஷத்தில் ராகுவுடன் சஞ்சரிக்க உள்ள குருவால் யோகமா? அல்லது தோஷமா?

First Published | Apr 15, 2023, 7:33 AM IST

குரு சஞ்சரிக்க உள்ள மேஷத்தில் ராகுவும் இருப்பதால் யாருக்கு எப்படிப்பட்ட பலன்? யார் யார் கவனமாக இருக்க வேண்டும்! மேஷம் முதல் கன்னி வரை இந்த பதிவில் காணலாம். 

சுப கிரகங்களில் ஒன்றான குருபகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி பெயர்ச்சி அடைகிறார். இந்த குரு பெயர்ச்சி நிகழ உள்ளதால் கோவில்களில் சிறப்ப வழிபாடுகழும்,பூஜைகளும்,யாகங்களும் நடைபெறும்.

குரு சஞ்சரிக்க உள்ள மேஷத்தில் ராகுவும் இருப்பதால் யாருக்கு எப்படிப்பட்ட பலன்? யார் யார் கவனமாக இருக்க வேண்டும் என்பதனை இந்த பதிவில் காணலாம்.

ராகுவும் குருவும் சேர்ந்து ஒரே இராசியில் இருந்தால் குருசண்டாள யோகம் உண்டாகும். ஆகையால் எதிர்பார்க்காத திடீர் அதிர்ஷ்டம் மற்றும் பணவரவு உண்டாகும். இந்த யோகம் அமையும் போது வாழ்வில் நல்லதொரு ஏற்றத்தையும்,உயர்வையும்,எதிர்பாராத பண வரவையும் உண்டாக்கும்.

மேஷம்:

மேஷ ராசியினருக்கு ஜென்ம குருவாக ராகு உடன் சேர்கிறார். ஆகையால் எங்கு, எப்படி பணம் வருகிறது என்று தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு பண மழை பொழியும். தம்பதிகளுக்குள் இருந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். புதிதாக செய்யும் முயற்சிகளுக்கு ஜெயம் உண்டாகும்.

சொந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இந்த ஆண்டு எதிர்பார்த்த சுப காரியங்கள் நடைபெறும்.ஆன்மீகம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்வீர்கள். மாணவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரையில் குரு பகவானுக்கு நெய் விளக்கு ஏற்று வழிபட குருவின் ஆசியோடு நல்ல மதிப்பெண்கள் பெறலாம்.

Tap to resize

ரிஷபம்:

வீண் விரையங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. கெளரவத்திற்காக செலவு செய்வதால் சேமித்த பணமும் கைவிட்டு நழுவும். எந்த ஒரு செயல் செய்வது எனினும் குடும்பத்தில் கலந்து ஆலோசித்து பின் முடிவெடுக்க வேண்டும். ஒரு சிலருக்கு கடன் வாங்கியாவது சொந்த வீடு கட்டும் யோகம் அமையும். அதோடு புதிய வண்டி வாகனங்கள் வாங்கவும் நல்ல ஒரு சூழல் ஏற்படும்.

மிதுனம்:

தம்பதியினருக்கு இடையில் அந்நியோன்யம் பிறக்கும். வீட்டில் எதிர்பார்த்த சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உயர் பதவியில்இருப்பவர்கள் பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். சொந்த வீடு அமையும் யோகம் உள்ளது.தடைப்பட்டு பாதியில் நின்ற பணிகள் அனைத்தும் மீண்டும் ஆரம்பித்து முடிப்பீர்கள். மனதில் குழப்பமில்லாமல் நிம்மதியுடன் வாழ்வீர்கள்.

கடகம்:

தேவையற்ற எந்த உறுதிமொழியையும் /வாக்குகளையும் யாருக்காகவும் தர வேண்டாம். உங்கள் திறமை மற்றும் உழைப்பினை மற்றவர்கள் பயன்படுத்தி முன்னேற நினைப்பார்கள். ஆகையால் வேலை செய்யும் இடத்தில் நீங்களே உங்கள் பணிகளை செய்து முடிப்பது நல்லது. உத்தியோகம் செய்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பதால் குழப்பம் மற்றும் டென்ஷன் ஏற்படும் .

சிம்மம்:

பாக்ய குருவாக ஒன்பதாம் வீட்டில் ராகு சேர்ந்து பயணம் செய்ய உள்ளார். உங்கள் ராசிக்கு குரு பலன் கிடைப்பதால் திருமணத்திற்க்காக காத்திருப்பபவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டி நன்றாக படித்தால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெற முடியும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். வியாழக்கிழமை தோறும் விநாயகப் பெருமான் மற்றும் ஹனுமனை வழிபாடு செய்து வரவும்.

கன்னி:

சொந்த தொழில்/வியாபாரம் செய்பவர்கள் அகலக் காலை வைக்க வேண்டாம். பணம் கடனாக கொடுப்பதில் மிகுந்த கவனத்துடன் செயல்படுங்கள். ஏன்னெனில் பணம் திரும்ப கிடைக்காமல் போகும் சூழல் உள்ளது. பணம் தொடர்புடைய விஷயங்களில் தம்பதிக்குள் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். வேலை செய்பவர்களுக்கு உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்காமல் வாக்குவாதங்கள் உண்டாகும். அப்படியான சூலில் அமைதியை மேற்கொள்வது நல்லது. குலதெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபடுதல் நன்மை பயக்கும்.

தகதகவென மின்னும் கார்பைட் மாம்பழங்களால் உடலுக்கு தீங்கு!கண்டறிய வழிகள் உள்ளனவா? எப்படி தெரிந்து கொள்வது!

Latest Videos

click me!