ஜோதிடத்தில், வீட்டில் பயன்படுத்தப்படும் வாசனை திரவியங்கள், கிரகங்களுடன் தொடர்பு கொண்டுள்ளன. இறைவழிபாட்டின் போது கூட சில வாசனை பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. மஞ்சள் அப்படியான பொருள்களில் ஒன்றாகும். மஞ்சளை சாதாரணமாக நினைக்க முடியாது. அது ஆயுர்வேதத்தில் மட்டுமல்ல, ஜோதிடத்திலும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. வீட்டில் மஞ்சள் கலந்த நீரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
மஞ்சள் தண்ணீர் மனிதர்களுக்கு கிடைத்த பொற்கொடை. மஞ்சள் தண்ணீரால் செய்த பரிகாரங்கள் நம் வீட்டு பிரச்சனைகளை வேரோடு அழிக்கிறது. வீட்டின் பிரதான வாயிலில் மஞ்சள் தண்ணீரை தெளிப்பதால் பல அற்புதமான பலன்களை பெறலாம்.
மஞ்சள் மிகவும் புனிதமானதாகவும் மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது. நம் வீட்டின் வாசலில் மஞ்சள் தண்ணீரை தெளிப்பதால் நேர்மறை, தெய்வீக ஆற்றல் வீட்டில் வாசம் செய்யும். பூஜையில் பயன்படுத்தப்படும் மஞ்சளை வாசலில் தெளிப்பதன் மூலம் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் முற்றிலும் நீங்கும்.
ஜோதிடத்தின்படி, வீட்டின் பிரதான கதவு கிரகத்தின் மையமாக கருதப்படுகிறது. வீட்டின் மெயின் வாசலில் மஞ்சள் தண்ணீதை தெளிப்பதன் மூலம் வீட்டில் இருக்கும் வாஸ்து மற்றும் கிரக தோஷங்கள் நீங்கும். வீட்டின் வாசல் ராகுவுடன் தொடர்புடையது என்பார்கள். அதனால் வீட்டின் பிரதான வாசலில் மஞ்சள் தண்ணீரை தெளிப்பது ராகுவை பாதிக்காது. அது வீட்டிற்கு முன்னேற்றம் தரும்.