அட்சய திருதியை நாளில் இந்த 1 காரியம் மறக்காம செய்யுங்க! அள்ள அள்ள குறையாமல்... வீட்டில் செல்வம் பெருகுமே!!!

First Published | Apr 14, 2023, 10:24 AM IST

Akshaya Tritiya 2023: அட்சய திருதியை நாளில் எந்தெந்த விஷயங்களை செய்வதால் வீட்டில் செல்வ செழிப்பு பெருகும் என்பதை இங்கு விரிவாக காணலாம்

அட்சய திருதியை என்பது வாங்குவதற்கு மட்டுமல்ல, தானம் கொடுப்பதற்கும் ஏற்ற நாள். இதை தான் இந்து சாஸ்திரங்கள் நமக்கு சொல்லி தருகின்றன. கஷ்டத்தில் உழன்று வரும் ஏழை மக்களுக்கு அட்சய திருதியை அன்று உங்களால் இயன்ற தானம் செய்யுங்கள். தங்கம் வாங்க முடியவில்லையா? இருப்பதில் தானம் செய்யுங்கள். இந்த காரியத்தால் நாம் மட்டுமல்ல, நம் வருங்கால சந்ததியினரும் மகிழ்வார்கள் என்பது ஐதீகம். 

அட்சய திருதியை 2023 எப்போது? 


சித்திரை மாதத்தில் வரும் அமாவாசைக்கு அடுத்த 3ஆம் நாள் திதி தான் அட்சய திருதியை. இந்தாண்டு ஏப்ரல் 23ஆம் தேதி ஞாயிற்றுகிழமை வருகிறது. முந்தைய நாளான ஏப்ரல் 22ஆம் தேதியே காலை 09.18 மணிவாக்கில் திதி தொடங்கிவிடும். மறுநாள் காலை 09.27 மணி வரை மட்டுமே அட்சய திருதியை திதி இருக்கும். தங்கம் வாங்க விரும்புவோருக்கு நல்ல நேரம் என்பது ஏப்ரல் 22ஆம் தேதி காலை 07.49 மணி முதல் ஏப்ரல் 23ஆம் தேதி காலை 07.47 மணி வரையில் ஏற்ற நேரமாக கணிக்கப்பட்டுள்ளது.  

Tap to resize

அட்சய திருதியை நாளின் சிறப்பே இந்த நன்னாளில் எந்த காரியத்தை தொடங்கினாலும் அது வெற்றி காணும் என்பது ஐதீகம். எதையும் குறைய விடாமல் அள்ளி தரும் இந்தத் திருதியை நாளில், தானங்கள் செய்பவர்களுக்கு புண்ணியம் பல மடங்கு கிடைக்கும். 

அட்சய திருதியை அன்று தானம் கொடுக்க வேண்டியவை! 

தண்ணீரை தானமாக வழங்கினால் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். ஐந்தறிவு ஜீவராசிகளுக்கு தண்ணீர் கொடுத்து தாகம் போக்கினால் இறையருளை பெறலாம். கணவர் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழ வேண்டும் என விரும்பும் மனைவிகள் அட்சய திருதியை அன்று குங்குமத்தை தானமாக வழங்கலாம். குடும்ப வாழ்க்கை இதனால் மகிழ்ச்சியாக மாறும். வெல்லம், நெய் மற்றும் உப்பு ஆகியவற்றை ஏழைகளுக்கு தானமாக கொடுத்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். 

ஏழை எளியோருக்கு அட்சய திருதியை நாளில் புத்தாடைகள் தானமாக கொடுத்தால் இறைவனின் ஆசிய பெறலாம். புண்ணியம் பெருகும். செல்வ செழிப்பையும், ஆரோக்கியமான வாழ்வையும் பெற விரும்புவோர் பால் மற்றும் பால் சார்ந்த பொருள்கள், சந்தனத்தை தானம் செய்யலாம். 

இதையும் படிங்க: அட்சயதிரிதியை 2023: இந்த நாளில் தங்கம் வாங்க முடியாதவர்கள் என்ன வாங்கணும் தெரியுமா?

விரதம் இருக்கும் முறை

அட்சய திருதியை நாளில் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டிய கட்டாயமில்லை. விரும்பினால் திரவ ஆகாரம் அருந்தி விரதம் இருக்கலாம். அதுவும் உங்களுடைய உடல் நலத்தை பொறுத்து தான். ஆனால் இந்த நாளில் தானம் செய்வது உங்களை உயர்த்தும்.  

இதையும் படிங்க: நகங்களின் நிறத்தை என்ன நினைச்சிங்க! அதை வைத்தே உங்க ஆரோக்கியத்தை சொல்லலாம்.. உங்க நகம் எப்படி இருக்கு பாருங்க!

Latest Videos

click me!