சித்திரை மாத ராசி பலன் 2023: சூரிய குபேர யோகத்தால் செல்வ செழிப்புடன் இருக்க போகும் 4 ராசிகள்!

First Published | Apr 14, 2023, 7:16 AM IST

சூரியன் இடம்பெயர்வதனால் 4 ராசிகளுக்கு குபேர யோகம் ஏற்படுகிறது. இந்த குபேர யோகத்தினால் பணம் மற்றும் ஆரோக்கியம் உள்ளிட்டவற்றில் சுபம் பெற உள்ள ராசிகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் காணலாம்
 

தமிழ் வருடப்பிறப்பான சோபகிருது வருடம் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதம் இன்று முதல் பிறக்கிறது. இந்த சித்திரை மாதத்தில் நவகிரகங்களின் தலைவனான சூரிய பகவான் பெயர்ச்சி ஆகி மேஷ ராசியில் உச்சம் அடையக்கூடியமாதம் தான் இந்த சித்திரை மாதம்.

சூரியன் இடம்பெயர்வதனால் 4 ராசிகளுக்கு குபேர யோகம் ஏற்படுகிறது. இந்த குபேர யோகத்தினால் பணம் மற்றும் ஆரோக்கியம் உள்ளிட்டவற்றில் சுபம் பெற உள்ள ராசிகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

​குபேர யோகம் :​

மேஷ ராசியில் சூரியன் நகரக்கூடிய நிலையில், அங்கு புதன் சஞ்சாரம் செய்வதால் புதாதித்திய யோகம் ஏற்படுகிறது. அதனைடுத்து குரு பகவானும் பெயர்ச்சி ஆக இருக்கிறார். மேஷத்தில் ஏற்கனவே இருக்கும் ராகுவினால் குரு சண்டாள யோகம் ஏற்படுகிறது. இப்படியான அற்புதங்கள் நிறைந்த கிரக சேர்க்கையினால் குபேர யோகமானது சித்திரை மாதத்தில் ஏற்படவுள்ளது.

இந்த குபேர யோகத்தால் 4 ராசிகளுக்கு நன்மையான பலன்கள் உண்டாகும் என்பதால் பணம், ஆரோக்கியம், புத்தி கூர்மை ஆகியவற்றில் மேன்மை கிடைக்கும்.

மேஷ ராசி:

மேஷத்தில் சூரியன் உச்சம் பெறுவதால், அதிக அளவில் சுப பலன்கள் பெறுவீர்கள். உங்களது திருமண வாழ்க்கை மிகுந்த மகிழ்ச்சியானதாக மாறும். அதோடு நீங்கள் செய்கின்ற பணியில் அங்கீகாரம் கிடைக்கும். வேலை இல்லாமல் வேலை தேடுபவர்களுக்கு நல்லதொரு வேலை கிடைக்கும். உங்களின் புதிய திட்டங்கள் செய்லபடுத்த உகந்த காலமாக இந்த காலம் அமையும்.

உங்களுடைய பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணும் சூழல் உண்டாகும். சொந்தமாக தொழில்/ வியாபாரம் செய்பவர்களுக்கு அதீத லாபம் கிடைக்கும் நேரமாக இது அமைகிறது.

Tap to resize


விருச்சிக ராசி:

இந்த சித்திரை மாதத்தில் பல்வேறு விதங்களில் சுப பலன்கள் ஏற்பட இருக்கிறது. புதிதாக சொந்த வீடு அல்லது மனை வாங்க நினைப்பவர்கள், புதிய வாகனம் வாங்க முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான சூழலாக இந்த காலம் அமையும்.

உங்களின் பொருளாதாரத்தில் ஏற்றம் காணப்படும். வருமானத்தில் ஏற்றம் உண்டாகும் எனினும் , உங்களின் செலவுகளைக் கட்டுப்படுத்துவைத்து சிறந்தது. நீங்கள் செய்யும் புதிய முயற்சிகள் அனைத்தும் துலங்கும். அதோடு நல்லதொரு லாபமும் கிடைக்கபெறுவீர்கள். உங்கள் இல்லற வாழ்வு மகிழ்ச்சி நிறைந்து காணப்படும்.

தனுசு ராசி:

தனுசு ராசிக்கு புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் சஞ்சாரம் ஏற்படுவதாழும், அதனையடுத்து உண்டாக இருக்கும் கிரக சேர்க்கையினாலும் பல வகைகளில் உங்களுக்கு முன்னேற்றம் ஏற்படுவதாக அமையும்.

இதனால் தனுசு ராசியினருக்கு பொருளாதாரத்தில் மேன்மை உண்டாகும். அதோடு இந்த காலத்தில் இறை அருளும்,பெரியவர்களின் ஆசியும் கிடைக்கப் பெறுவீர்கள். நீங்கள் செய்கின்ற அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு சாதகமாக அமையும். புதிய வீடு, பொன் ,பொருள், வாகனம் வாங்க சாதகமான சூழ்நிலையாக இருக்கும்.

சொந்தமாக வியாபாரம்/ தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். உங்களின் இல்லற வாழ்க்கையில் பல விதங்களில் மகிழ்ச்சியான சூழல் அமைய இருப்பதால் உங்களது செலவுகளை திட்டமிட்டு செயல்படுத்துங்கள்.

மீன ராசி:

மீன ராசிக்கு சூரியனின் நகர்வு பல விதங்களில் நல்ல பலன்கள் தருவதாக அமையும். அதோடு மகாலக்ஷ்மியின் அருளைப் பெறுவதால் பொருளாதாரத்தில் சிறப்பான அமைப்பு உண்டாகும் . நீங்கள் செய்கின்ற முதலீடுகள் மூலமாக அதிக லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.

நீங்கள் வேலை செய்யும் இடத்தில உங்களின் மரியாதை உயரும். உங்கள் இல்லற வாழ்வு மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். நிலுவையில் இருக்கும் கடன் பிரச்னைகள் தீர வாய்ப்புகள் உள்ளன.

குறிப்பு: இங்கு கூறப்பட்டுள்ள அனைத்து தகவல்கள் ஜோதிட ரீதியில் நம்பிக்கையாக கூறப்பட்டுள்ளது. இவையனைத்தும் அனுமானங்களை அடிப்படையாக கொண்டது.

தேங்காய் எண்ணெயில இதை சேத்து தடவினா இளநரை,பொடுகு,முடி உதிர்வுக்கு பாய் சொல்லி,முடிவளர்ச்சிக்கு ஹாய் சொல்லுங்க

Latest Videos

click me!