தமிழ் புத்தாண்டு 2023 : வழிபாடு செய்ய நல்ல நேரம் எது? எப்படி வழிபட வேண்டும்!

First Published | Apr 13, 2023, 4:41 PM IST

Tamil new year 2023: தமிழ் புத்தாண்டு வழிபாடு செய்ய நல்ல நேரம் என்ன? எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்ற முழுவிவரங்கள் இத்தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. 

தமிழ் புத்தாண்டு நாளை (ஏப்ரல் 14) கொண்டாடப்படுகிறது. இந்த தேதியில் சுபகிருது வருடம் முடிந்து சோபகிருது ஆண்டு தொடங்க இருக்கிறது. இந்த நாளில் வழிபட்டால் ஆண்டு முழுவதும் மங்களகரமாகவும், நிதி நெருக்கடி இல்லாமலும் இருக்கும் என்பது நம்பிக்கை. பிறக்கும் தமிழ் புத்தாண்டை பிரார்த்தனைகளோடு வரவேற்க எப்போது இறைவனை வழிபட வேண்டும் என்பதை இங்கு காணலாம். 

தமிழ் புத்தாண்டு 2023 வழிபாடு செய்யும் நேரம்? 

இந்தாண்டு தமிழ் புத்தாண்டு அதாவது சித்திரை முதல் நாள் நாளை ஏப்ரல் 14ஆம் தேதி, வெள்ளிக்கிழமை வருகிறது. அன்றைய தினம் காலை 10.30 மணி முதல் 12 மணி வரையிலும் ராகு காலம் தான். இதன் காரணமாக தமிழ் புத்தாண்டு அன்று வழிபாடு செய்ய நினைப்பவர்கள் பிரம்ம முகூர்த்த வேளையில் வழிபட்டால் சுபம். அப்படி செய்ய முடியாத நபர்கள் காலை நீராடி விட்டு, 6 மணி தொடங்கி 10.20 மணிக்குள் வழிபாட்டை செய்து முடிக்க வேண்டும். பகல் வேளையில் இறைவனுக்கு படையல் வைத்து வழிபடலாம். இதற்கு பகல் 12.30 மணி தொடங்கி 2 மணி வரை நல்ல நேரம் என சொல்லப்படுகிறது. 

Tap to resize

பகலில் வழிபாடு செய்ய முடியாதவர்கள் மாலை 6 மணிக்கு பின்னர் விளக்கேற்றி வழிபடலாம். கிட்டத்தட்ட 8 மணி வரை தமிழ் புத்தாண்டின் வழிபாட்டை செய்யலாம். குறிப்பாக தமிழ் புத்தாண்டில் அரிசி, உப்பு, மஞ்சள், வெல்லம் ஆகியவற்றில் ஒன்றையாவது வாங்கி சுவாமி திருவுருபடத்திற்கு முன்னால் வைத்து வழிபட மறக்காதீர்கள். இப்படி வழிபட்டால் ஆண்டு முழுவதும் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். 

சித்திரை கனி 

சித்திரை கனி காண்பது தமிழ் புத்தாண்டின் முக்கியமான வழிபாடாகும். இதை செய்பவர்கள் வீட்டில் செல்வம் பெருகும் என்பார்கள் ஆன்மீக பெரியோர். முக்கனிகளுடன் மற்ற கனிகளையும், பணம் நகைகளை தட்டில் வைத்து கொள்ள வேண்டும். காலை எழுந்து கண்ணாடி பார்த்த பிறகு கனிகள் இருக்கும் தட்டை பார்க்க வேண்டும். இதன் வழிபாட்டு முறைகளை முழுமையாக அறிந்து கொண்டு வழிபடுங்கள் நல்ல பலன் கிடைக்கும். 

இதையும் படிங்க: தமிழ் புத்தாண்டு 2023: சித்திரை கனியை காண்பது எப்படி? என்ன பொருள் வாங்கினால் வீட்டில் செல்வம் குவியும்!!

தமிழ் புத்தாண்டில் தானம்... 

தமிழ் புத்தாண்டு தினத்தில் வீட்டு பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற்று வாங்கும் பணத்தை, நம்முடைய பணப்பையில் வைப்பதால் நிதி நெருக்கடி ஏற்படாது என்பது ஐதீகம். ஆசி வழங்கும் பெரியவர்கள் 1 ரூபாயாவது கொடுக்க வேண்டும். இன்றைய தினத்தில் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வது சிறப்பு வாய்ந்தது. உங்களால் முடிந்தால் அன்னதானம் செய்யலாம். குறைந்தபட்சம் இருவருக்கு உணவு வாங்கி கொடுங்கள். அன்ன தானம் மட்டுமில்லாமல், நீர்மோர் கூட தானமாக கொடுக்கலாம்.  

இதையும் படிங்க: வீட்டில் பணம் தங்கவில்லையா? நிலைவாசலில் இப்படி குங்குமப் பொட்டு வைத்தால், வற்றாத செல்வம் வீட்டில் சேரும்!

Latest Videos

click me!