வீட்டில் பணம் தங்கவில்லையா? நிலைவாசலில் இப்படி குங்குமப் பொட்டு வைத்தால், வற்றாத செல்வம் வீட்டில் சேரும்!

First Published | Apr 13, 2023, 3:32 PM IST

வீட்டிலோ அலுவலகத்திலோ பணம் தங்காமல் தொடர்ந்து நிதி நெருக்கடியை சந்திப்பவர்கள் குங்குமத்தைப் பயன்படுத்தி இந்த பரிகாரத்தை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். 

வாஸ்து சாஸ்திரம் என்றால் பழங்கால இந்திய கட்டிடக்கலை, வடிவமைப்பின் அறிவியல் என்கிறார்கள் நிபுணர்கள். வாஸ்து சரியாக இருந்தால் நாம் வாழும் இடங்களில் எல்லா வளமும் சிறப்பாக கிடைக்கும். வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருள்களும் வீட்டின் நல்ல அல்லது கெட்ட காரியங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். வீட்டில் தொடர்ந்து நிதி சிக்கல் ஏற்பட்டால் இந்த மாற்றத்தை மட்டும் செய்து பாருங்கள். செல்வம் செழிக்கும் வாழ்க்கையை பெறுவீர்கள். 

நாம் சம்பாதிக்கும் பணம் கையில் தங்கவும், செலவுகள் குறைந்து வரவு உயரவும் அடிக்கடி பரிந்துரைக்கப்படும் ஒரு தீர்வு 'குங்குமம்' பரிகாரம் தான். குங்குமம் பாரம்பரியமாக இந்து மத சடங்குகளில் பயன்படுத்தப்படும் அற்புத பொருள். இது மங்களகரமானதாக கருதப்படுகிறது. நிதி சிக்கல்களுக்கு தீர்வாக குங்குமத்தை எப்படி பயன்படுத்துவது என இங்கு தெரிந்து கொள்ளுங்கள். 

Tap to resize

நாள்தோறும் உங்கள் வீடு அல்லது அலுவலகத்தின் பிரதான வாசலில் குங்குமத்தை பயன்படுத்த வேண்டும். வீட்டின் வாசலில் குங்குமம் வைப்பதால் உங்கள் வாழ்க்கையில் நேர்மறை ஆற்றல் வரும். குங்குமம் வைப்பதால் செழிப்பைக் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. 

இதையும் படிங்க: சனி சந்திர சேர்க்கையால் உண்டாகும் விஷம யோகம்! இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! மீறினால் இத்தனை பிரச்சனை?

தினமும் பூஜைகளுக்கு பின்னர் வீட்டு வாயிலில் குங்குமம் வைப்பதை பழக்கப்படுத்தி கொள்ளுங்கள். இதனால் எதிர்மறை ஆற்றல் விலகி நேர்மறை ஆற்றல் ஈர்க்கப்படும். நிலை வாசலுக்கு குங்கும பொட்டு வைக்கும்போது மனதில் இஷ்ட தெய்வம், குலதெய்வத்தை நினைத்து கொள்ளுங்கள். அவர்களின் திருநாமம், பட்டை ஆகிய குறியீடுகளை போல நிலைவாசலில் பொட்டு வைத்துவிடுங்கள். இதை செய்யாவிட்டால் மஞ்சள், சந்தனம் ஆகியவற்றை கலந்து உங்களின் கை அங்குல அளவில் 2 பக்கமும் தடவி, அந்த ஈரத்தில் குங்குமத்தை 3 இடங்களில் வைக்கலாம். இதனால் வீட்டில் செல்வம் பெருகும். இதனை வியாழக்கிழமை செய்வது நல்லது. 

இதையும் படிங்க: தமிழ் புத்தாண்டு 2023: சித்திரை கனியை காண்பது எப்படி? என்ன பொருள் வாங்கினால் வீட்டில் செல்வம் குவியும்!!

Latest Videos

click me!