தமிழ் புத்தாண்டு 2023: நாளை வெள்ளிக்கிழமை திருவோணம் நட்சத்திரத்தில் தமிழ் வருடமான சோபகிருது பிறக்கிறது. ஒவ்வொரு மாத பிறப்பிலும் ஒவ்வொரு பொருளை வீட்டில் வாங்கி வைப்பதன் மூலம் அந்த பொருள் பெருகிக் கொண்டே வரும் என்பது சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள உண்மை . அந்த விஷயம் தமிழ் புத்தாண்டிற்கு மிகவும் பொருந்தும்.
அதிலும் குறிப்பாக தமிழ் புத்தாண்டின் போது வாங்கி வைக்கும் பொருட்கள், அந்த வருடம் முழுதும் பெருகிக் கொண்டே செல்லும் . அதோடு இந்த வருடம் வெள்ளிக்கிழமையில் பிறக்கிறது என்பது கூடுதல் சிறப்பு .
நாளை வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையான காலை 6 மணி முதல் 7 மணிக்குள் , மதியம் 1 மணி முதல் 2 மணி வரை , இரவு 8 மணி முதல் 9 மணி வரையிலான நேரங்கள் சுக்கிர ஹோரையில் வருபவை ஆகும். ஆக நாளை காலை முதல் ஹோரையில்( 6 மணி முதல் 7 மணி வரை ) இந்த பொருட்களை வாங்கி வீட்டில் பூஜை செய்தால் இந்த வருடம் முழுதும் வற்றாத செல்வம் கிடைக்கும் .
புத்தாண்டு தினமான நாளை சுக்கிர ஹோரையில் வாங்க வேண்டிய பொருட்கள் என்னென்ன என்பதை இந்த பதவில் காணலாம்.