சனி சந்திர சேர்க்கையால் உண்டாகும் விஷம யோகம்! இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! மீறினால் இத்தனை பிரச்சனை?

First Published | Apr 13, 2023, 11:17 AM IST

Effects of Saturn Moon conjunction: சனி சந்திர சேர்க்கையால் உண்டாகும் விஷ யோகத்தினால், 3 ராசிக்காரர்களுக்கு பாதிப்பு உண்டாகும். 

ஜோதிடத்தின் படி, ஒரு ஜாதகத்தில் உண்டாகும் நல்ல யோகம் ஒருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் தரும். அசுப யோகம் ஒருவரின் பிரச்சனைகளை அதிகரிக்கும். அத்தகைய யோகங்களில் ஒன்று விஷ யோகம், இது அசுப யோகமாக கருதப்படுகிறது. இந்த ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி, சந்திரனும் சனியும் இணைந்தால் விஷ யோகம் உண்டாகும். ஜென்ம குண்டலியில் சந்திரனும் சனியும் இடம் பெறுவதை அடிப்படையாகக் கொண்டு விஷ யோகம் உருவாகிறது. 

சனி-சந்திரனின் இந்த விஷ யோகத்தால் ஒரு நபர் உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இது மட்டுமின்றி சில சமயங்களில் இந்த யோகத்தால் ஒருவரின் மனநிலை மோசமாகி பைத்தியமாக கூட மாறிவிடுகிறார். சிலர் இந்த விஷ யோகத்தால் மரணம், பயம், துக்கம், இழிவு, நோய், வறுமை, சோம்பல், கடன் ஆகியவற்றை சந்திக்க நேரிடும். இந்த விஷ யோகத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரின் மனதில் எப்போதும் எதிர்மறை எண்ணங்கள் இருக்கும், இதனால் அவருடைய வேலையும் கெட்டுப் போகத் தொடங்கும். 

Tap to resize

கடகம் (Cancer) 

சந்திரன், சனியின் சேர்க்கை கடக ராசிக்காரர்களுக்கு தொல்லை தரும். இந்த இணைவு விருச்சிகத்தின் எட்டாம் வீட்டில் நடைபெறுகிறது. வீட்டில் உள்ள பெரியவர்களின் உடல்நிலை மோசமடையலாம். நீங்கள் ஒரு புதிய வேலையைத் தொடங்க விரும்பினால், இப்போதே நிறுத்துங்கள். முதலீடும் நன்றாக இல்லை. எந்த விவாதத்திலும் ஈடுபட வேண்டாம்.

கன்னி (Virgo) 

ஆறாம் வீட்டில் சந்திரனும் சனியும் இணைவது விஷ யோகமாகிறது. இந்த நேரத்தில், நீதிமன்ற வழக்கில் தோல்வி ஏற்படலாம். சில காரணங்களால் வாழ்க்கை துணையுடன் உறவில் விரிசல் ஏற்படலாம். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருப்பது நல்லது. 

இதையும் படிங்க: அட்சய திருதியை 2023: எந்த நேரத்தில் தங்கம், வெள்ளி வாங்கினால், நம் வீட்டில் செல்வம் குவியும் தெரியுமா?

விருச்சிகம் (Scorpio)

இந்த ராசிக்காரர்களின் ஆறாம் வீட்டில் சந்திரனும் சனியும் இணைந்திருப்பது வேதனையை தரும். உங்களுக்கு மன உளைச்சல் இருக்கலாம். வீட்டிலும் சில அசுப செய்திகள் வந்து சேரும். மேலும், நிதி நிலை பலவீனமாகலாம். 

இதையும் படிங்க: தமிழ் புத்தாண்டு அன்று சித்திரை கனியை காண்பது எப்படி? என்ன பொருள் வாங்கினால் வீட்டில் செல்வம் குவியும்!!

Latest Videos

click me!