Today Rasipalan 13th Apr 2023: முதலீடு செய்ய வேண்டியது யார்..? முதலீடு செய்யக்கூடாதது யார்..?

Published : Apr 13, 2023, 05:30 AM IST

ஏப்ரல் 13ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம்.  

PREV
112
Today Rasipalan 13th Apr 2023: முதலீடு செய்ய வேண்டியது யார்..? முதலீடு செய்யக்கூடாதது யார்..?

மேஷம்:

வழக்கமான அழுத்தமான தினசரி வாழ்க்கையிலிருந்து இன்று கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். ஆன்மீகத்தில் உங்களது ஈடுபாடு, ஆர்வத்தின் பயனாக ஆன்மீகம் சார்ந்த நபர்களை சந்திப்பீர்கள். அது உங்களுக்கு உதவிகரமாக அமையும்.  பங்குச்சந்தை உள்ளிட்ட முதலீட்டிலிருந்து விலகியே இருங்கள். தொழிலில் சாதிப்பீர்கள்.
 

212

ரிஷபம்:

எந்த வேலையாக இருந்தாலும் அவசரப்படாமல் நிதானமாக செய்து முடியுங்கள். இன்று சூழல்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். நெருக்கமானவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். அதிகமாக யோசித்து நேரத்தை வீணடிக்காமல் உடனே செயலில் இறங்குங்கள். 
 

312

மிதுனம்:

இன்றைய தினம் கிரகங்களின் அமைவு உங்களுக்கு சாதகமாக உள்ளது. இளைஞர்கள் வேலையில் வெற்றி காண்பார்கள். கிரியேட்டிவாக செய்யும் வேலைகள் அதிகரிக்கும். நெருங்கிய நண்பரிடமிருந்து ஆதரவும் ஒத்துழைப்பும் பெறுவீர்கள். பூர்வீக சொத்து பிரச்னையை முடிக்க பாருங்கள். 
 

412

கடகம்:

வீட்டு பராமரிப்பு வேலைகளில் பிசியாக இருப்பீர்கள். தனிப்பட்ட வேலையை வெற்றிகரமாக முடித்து மன அமைதி அடைவீர்கள். கஷ்டமான வேலைகளை கூட உங்கள் மன உறுதி மற்றும் திறமையால் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் மீது நம்பிக்கை வைத்து செயல்படுங்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும்.
 

512

சிம்மம்:

உங்களுக்கு நெருக்கமானவர்களிடமிருந்து புதிய தகவல் கிடைக்கும். அதை செயல்படுத்துவதன் மூலம் ஆதாயம் அடைவீர்கள். கடன் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். சட்டவிரோத செயல்களில் ஈடுபட வேண்டாம். நெருங்கிய நண்பருடனான உறவை காப்பாற்றிக்கொள்ளவும். 
 

612

கன்னி:

இன்று பெரும்பாலான வேலைகளை சரியான நேரத்தில் முடிப்பீர்கள். அரசு ரீதியான வேலை எதுவும் நிலுவையில் இருந்தால் அது இன்று முடியும். சொத்து, வாகனம் விற்க வேண்டும் என்றால் இன்று செய்ய வேண்டாம். அந்த திட்டத்தை ஒத்திவையுங்கள். பரபரப்புக்கு மத்தியில் குடும்பத்தினருடன் நேரம் செலவழியுங்கள். 

712

துலாம்:

குடும்பத்தில் உங்கள் அறிவுரைக்கு ஸ்பெஷலான முக்கியத்துவம் கொடுக்கப்படும். பெண்கள் அவர்களது வேலைகளை முழு நம்பிக்கையுடனும் அர்ப்பணிப்புடனும் செய்து முடிப்பார்கள். வேலைக்கு இடையே ஓய்வும் எடுத்துக்கொள்ளவும். 
 

812

விருச்சிகம்:

கடந்த சில காலமாக இருந்துவந்த பிரச்னையிலிருந்து விடுபடுவீர்கள். வீட்டிற்கு உறவினர்கள் வருவார்கள். குழந்தைகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும். குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கவும். இன்றைய தினம் எந்த காரணத்திற்காகவும் பயணம் செய்ய வேண்டாம்; ஒத்திவைக்கவும். அறிவுப்பூர்வமான முடிவுகள் தொழிலில் நல்ல ரிசல்ட்டை கொடுக்கும். எந்த வேலையாக இருந்தாலும் மனைவியின் பேச்சை கேட்டு செயல்படவும்.
 

912

தனுசு:

உங்கள் திட்டங்களை செயல்படுத்த நண்பர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். அறிமுகமில்லாதவர்களிடம் கவனமாக இருக்கவும். இல்லையெனில் தேவையில்லாத அசிங்கம், பழி ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்தவும். தொழிலில் கவனம் செலுத்தவும்.
 

1012

மகரம்:

உங்கள் கனவு நனவாகும் நாள். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அவர்களது எதிர்கால திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். கடினமாக உழையுங்கள். உங்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க ஏதுவாக கிரகங்கள் அமைந்துள்ளன. நெருக்கமானவரின் ஆலோசனையை ஏற்று செயல்படுங்கள்; ஆதாயம் அடைவீர்கள். கணவன் - மனைவி இடையே உறவு இனிமையாக இருக்கும்.
 

1112

கும்பம்:

பொருளாதார விஷயங்களில் எதிர்பாராது கிடைத்த வெற்றி மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். ஆன்மீக ஈடுபாடு அவசியம். ஈகோவை தவிர்க்கவும். நண்பர்கள் அல்லது இண்டர்நெட்டில் அதிக நேரத்தை வீணடிக்காதீர்கள். 
 

1212

மீனம்:

ஏதேனும் பாலிசிகளில் முதலீடு செய்ய விரும்பினால் உடனே செய்யுங்கள். தனிப்பட்ட வேலைகளில் கவனக்குறைவாக இருக்க வேண்டாம். ஊழியர்களுடனான உறவை கெடுத்துக்கொள்ளாதீர்கள். தொழிலில் புதிய காண்ட்ராக்ட்டுகள் கிடைக்கும்.
 

Read more Photos on
click me!

Recommended Stories