வீட்ல கண்ணாடியை இங்க வச்சு பாருங்க! தண்ட செலவு குறைஞ்சு, 4 காசு சேத்து வைக்கலாம்.

First Published | Apr 11, 2023, 2:58 PM IST

வீண் செலவுகள் குறையவும், கையில் காசு தங்கவும் வீட்ல கண்ணாடியை இந்த இடங்களில் வச்சா நல்லதொரு மாற்றம் நிச்சயம் இருக்கும். அப்படியான இடம் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.
 

நம்மில் அனைவரும் இரவு, பகல் என்று நேரம் பாராமல் எப்போதும் பரபரப்பாக உழைப்பது 4 காச சேர்த்து கொஞ்சம் கவுரமா வாழணும்னு தான். ஆனா நாம இப்படி நினைத்து நீண்ட நேரம் உழைத்து சம்பாதித்தாலும், 4 கசாந்த காச சேர்க்கிறதுக்குள்ள பெரும்பாடு ஆகி விடுகிறது. தீடீர் மருத்துவ செல்வது, வண்டி வாகன செலவு என்று ஒன்று மாற்றி ஒன்று வீண்செல்வுகள் வந்தா எப்படி தான் காச சேர்த்து வைக்க முடியும்ன்னு நிறைய பேர் ஃபீல் பண்றவங்கள பார்த்து இருப்பீங்க!

இந்த மாதிரியான வீண் செலவுகள் குறையவும், கையில் காசு தங்கவும் வீட்ல கண்ணாடியை இந்த இடங்களில் வச்சா நல்லதொரு மாற்றம் நிச்சயம் இருக்கும். அப்படியான இடம் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

கண்ணாடி என்பது நம்மை அப்படியே பிரதிபலிக்கும் தன்மை கொண்டது என்று தெரியும், ஆனால் கண்ணாடி மஹாலட்சுமியின் அம்சம் நிறைந்தது என்பது தெரியுமா? அப்படியான கண்ணாடியை சரியான இடத்தில வைத்தால் நாம் சம்பாத்திக்கும் காசு விரயம் ஆகாமல் ,
வாஸ்து படி சில இடஙக்ளில் கண்ணாடியை வைப்பதால் குடும்பத்தில் சந்தோஷமும்,நிம்மதியும் தரும். தவிர பணமும் கையில் தங்கும் .

கண்ணாடி என்பது அஷ்ட மங்கள பொருட்களில் ஒன்றாகும். இப்படியான கண்ணாடியை வீட்டில் சில குறிப்பிட்ட இடங்களில் வைத்தால் மஹாலக்ஷ்மியின் மகத்தான சக்தியும், பரிபூரண ஆசியும் கிடைத்து கையில் காசும் பொருளும் சேர்ந்து கிடைக்கும்.

கோவில்களிலேயே நிறைய கோவில்களில் ,மூலவருக்கு எதிராக கண்ணாடியை மாட்டி வைத்திருப்பதை பார்த்து இருப்போம். வீட்டில் நிலைவாசல் படிக்கு மேல் கண்ணாடியை மாட்டி வைத்திருப்பார்கள். வீட்டிற்கு வருபவர்கள் அதனை பார்த்து விட்டு வரும் படியாக இருக்கும். அது மிகவும் சரியான ஒரு முறை என்றே கூறலாம். அப்படி நிலைவாசலுக்கு மேல் கண்ணாடி வைக்க முடியாதவர்கள் அங்கு விநாயகர் சிலை வைக்கலாம்.

கண்ணாடியை வைக்க சிறந்த இடங்கள்:

பூஜை அறை :

எப்போதும் பூஜை அறையில் ஒரு கண்ணாடி இருக்க வேண்டும். கண்ணாடியை தெய்வப் படங்களுக்கு எதிர்புறத்தில் இருக்குமாறு மாட்டி வைக்க வேண்டும். இப்படி கண்ணாடி மாட்டி வைப்பதால் தெய்வங்களின் பிரதிபலிப்பு அதிகரித்து காணப்படுவதோடு , குல தெய்வத்தின் பரிபூரண அருளும் கிடைக்கும்.

வீட்டின் பிரதான அறை :

இந்த அறையின் மேற்கு அல்லது தெற்கு திசைகளை நோக்கி கண்ணாடியை வைத்து பாருங்கள். அதாவது மேற்கு திசையையும் தெற்கு திசையையும் பார்த்தவாறு கண்ணாடியை மட்ட வேண்டும்.

Tap to resize

பாத் ரூம்:

குளிக்கும் இடமான பாத்ரூமில் கிழக்கு அல்லது வடக்கு திசையை பார்த்தவாறு கண்ணாடியை மாட்டி விட வேண்டும். வீட்டில் எந்த ஒரு திசையிலும் எதிரெதிராக கண்ணாடியை வைக்க கூடாது. ஒரு கண்ணாடியும் மற்றொரு கண்ணாடியும் எதிரொலிக்கிற மாதிரி வைக்கவே கூடாது.

கண்ணாடிக்கு நேர்மறை ஆற்றல் அதிகமாக இருப்பதால் , பணம் வைக்கும் இடங்களான பீரோ,கல்லா பெட்டி , நகை பெட்டி போன்ற இடங்களில் வைத்தால் பணம் பெருகும் என்பது சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள உண்மை.

முன் சொன்னது போன்று, கண்ணாடி மஹாலக்ஷ்ம்யின் அம்சம் மற்றும் அஷ்ட மங்கள பொருள் என்பதால் சுவர்களில் மாட்டி வைத்துள்ள கண்ணாடிகளுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வீட்டில் வெளிக்கேற்றும் போது தூபங்கள் காட்டி வழிபடுங்கள்.

வீட்டு நிலை வாசல்/பூஜை அறையில் இதை மட்டும் செஞ்சுடுங்க! வாஸ்து,தொழில், பணப் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்

Latest Videos

click me!