இன்று தேய்பிறை பஞ்சமி, வராஹி அம்மனுக்கு உகந்த வாராஹி ஜெயந்தி நால் என்பது கூடுதல் சிறப்பாகும். நமது முன்னோர்களின் பழமை வாய்ந்த/ ரகசிய வழிபாடுகளில் முக்கியமானது தவிர முதன்மையான வழிபாடுகளில் ஒன்று வாராஹி அம்மன் வழிபாடு.
வாராஹி அம்மன் பன்றி முகத்தில் காட்சியளிப்பாள். வராஹம் என்பது பன்றியின் அம்சமான விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும் வாராஹி அம்மனுக்கு 3 கண்கள் உள்ளதால் சிவ பெருமானின் அம்சத்தை குறிக்கிறாள். தவிர அம்பிகையின் அம்சமாக பிறந்துள்ளதால் இவள் சிவன்,ஹரி, சக்தி என்ற 3 அம்சங்கள் ஒரு சேர்ப் பெற்றுள்ளாள்
பைரவ ஸ்வாமியின் சக்தியாக இருப்பதால்,வாராஹி வழிபாடு செய்பவர்களுக்கு எதிராக எவரேனும் பில்லி, சூனியம், ஏவல் போன்றவை செய்தால், செய்த்தவர்களுக்கே அது பல விதங்களில் சிரமத்தை கொடுக்கும் . அத்தகைய சிறப்பம்சம் கொண்ட வாராஹியை வாராஹி ஜெயந்தியான இன்று எப்படி வழிபடுவது என்று இந்த பதிவில் காணலாம்.
எதையும் அடக்கும் சக்தி பெற்ற வாராஹி, மிருக பலமும், தேவ குணமும் பெற்றவள். இவளை வழிபடும் பக்தர்களின் துன்பங்களை தாங்கி காக்கிறாள். கூப்பிட்ட குரலுக்கு அன்னை வந்து விடுவாள். வாராஹியை வழிபட வழிபட நாம் வாழ்வில் எதிரிகள் எவரும் நம்மை நெருங்க அஞ்சுவார்கள். அத்தகைய சிறப்பைக் கொண்ட வாராஹிக்கு உகந்த தினமான இன்று அம்மனை வழிபாடு/பூஜை செய்து வாழ்வில் ஏற்றத்தை காண்போம்.
இவளின் பெயரிக் கேட்டாலே பலரும் பயப்படுவார்கள். அப்படியான சக்தி வாய்ந்த நாம் தான் வாராஹி அம்மன். சப்த கன்னிகளில் 5ஆம் ஆனவள். இவளுக்கு பஞ்சமி தாய் என்ற பெயரும் உண்டு. (வாழ்வின் பஞ்சங்களை துரத்தி அடிப்பவள் )
வாராஹி அம்மன் வழிபாடு :
தேய்பிறை பஞ்சமி திதியான இன்று மாலை 6 .30 மணியளவில் அல்லது இரவு 9 மணி முதல் 10 மணி வரை அன்னை வாராஹியை நமது வீட்டிலுள்ள பூஜையறையில் அமர்ந்து மந்திர ஜபத்தால் வழிபாடு செய்வது மிகச்சிறப்பாகும். தனியாக பூஜை அறை இல்லாதவர்கள் வீட்டின் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து மந்திரங்களை உச்சரிக்கலாம்.
வாராஹி அம்மனுக்கு பிடித்த நிறம் பச்சை நிறமென்பதால், பச்சை நிறத் துண்டு ஒன்று வைத்து அதனருகில் அகல் வைத்து அதில் இலுப்பை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.
(கிழக்கு திசை நோக்கி தீபம் ஏற்றினால் வடக்கு திசை நோக்கி நாம் அமர வேண்டும். வடக்கு திசை நோக்கி தீபம் ஏற்றினால் கிழக்கு திசை நோக்கி நாம் அமர்ந்து கொள்ள வேண்டும்.)
வேறு திசைகளில் ஏற்றினால் வழிபாட்டிற்கு ஏற்ற பலன் கிடைக்காது என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
நெய்வேத்தியமாக தேங்காய் பூரணம், சர்க்கரைப் பொங்கல் , கேசரி போன்றவற்றில் ஏதோ ஒன்றை வைத்து பூஜை செய்ய வேண்டும்
பூஜிக்கும் போது கூற வேண்டிய வாராஹி மந்திரம்
காயத்ரி மந்திரம்:
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்!
ஸ்ரீ வாராஹி அம்மன் துதி:
ஓம் குண்டலினி புரவாசினி , சண்டமுண்ட விநாசினி ,
பண்டிதஸ்ய மனோன்மணி , வாராஹீ நமோஸ்துதே!
அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி , அஷ்டதாரித்ரய நாசினி
இஷ்டகாமப்ரதாயினி , வாராஹீ நமோஸ்துதே!
தியான ஸ்லோகம் :
முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:
இந்த மாத்திரங்களை இன்று கூறுவது மிகச் சிறப்பாகும்.
வீட்டு நிலை வாசல்/பூஜை அறையில் இதை மட்டும் செஞ்சுடுங்க! வாஸ்து,தொழில், பணப் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்
இன்று தவிர வாராஹியை ஐந்து பஞ்சமி / 5 ஞாயிற்றுக் கிழமைகளில் தேங்காயை உடைத்து, இரண்டு மூடிகளிலும் நெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு, குங்குமம் வைத்து தீபம் ஏற்ற வேண்டும். அந்த தீபம் தானாகவே மலையேற விடவேண்டும். இவ்வாறு வாராஹியை வழிபாடு பூஜித்து வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும் தவிர தீராத கஷ்டம் தீரவும், கடன் பிரச்சினையில் இருந்து மீள முடியும் என்பது பலரும் கண்ட உண்மை!