வடகிழக்கு திசை, தெய்வங்களுக்கு ஏற்ற திசையாக இருக்கிறது. இத்திசையில் இருந்து நேர்மறை ஆற்றல் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
வாஸ்து படி ஆன்மீக சின்னங்களான ஓம், ஸ்வஸ்திக், ஸ்ரீ போன்றவற்றை பூஜை அறையில்/ வீட்டின் நிலை வாசலில் படம் வைத்து/ வரைந்து வழிபாட்டால் நமது நிதி நிலையில் நிச்சயமாக ஏற்றமிருக்கும். அதோடு குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும்.
ஸ்வஸ்திக் சின்னம்:
வீட்டின் பூஜை அறை /நிலை வாசலில் மஞ்சள் வைத்து ஸ்வஸ்திக் சின்னம் வரைவதால் சுப பலன்களை அது தரும்.தவிர இப்படி செய்வதன் மூலம் வீட்டின் வாஸ்து குறைகள் இருக்குமாயின் அதனை அகற்றி, நேர்மறை சக்தியை கொடுக்கும்.
ஸ்வஸ்திக் குறியீட்டை வரையும் போது நீளம் அகலம் இரண்டும் 1 அடி அளவில் உள்ளவாறு வரைய வேண்டும். இல்லையேல் ஸ்வஸ்திக் படத்தைக் கூட வைத்து பூஜிக்கலாம்.
இந்த ஸ்வஸ்திக் சின்னம் தீய விளைவுகளை தடுத்து நிறுத்துவதோடு லட்சுமி தேவியின் பரிபூரண ஆசீர்வாதத்தையும் தருகிறது. வீட்டில் மட்டும் இலலாமல் இதனை தொழில் செய்யும் இடங்களிலும் செய்வதால் தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைந்து லாபம் கிடைக்க பெறுவீர்கள் .