ரிஷபம், கன்னி, துலாம், மகரம் மற்றும் மீனம் இந்த 5 ராசிகளும் சித்திரை மாதத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாகும். இந்த 5 ராசிக்கான பலனை இந்த பத்வத்தில் காணலாம்.
ரிஷப ராசிக்கான சித்திரை மாத ராசி பலன் :
மேஷ ராசியில் சூரியன் உச்சம் பெறக்கூடிய இந்த காலத்தில் ரிஷப ராசிக்கு 12ம் இடமான விரய ஸ்தானத்தில் சூரியன் வருவதால் நீங்கள் பல்வேறு சவால்களைச் சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக நீங்கள் பணி செய்யும் இடத்தில உங்கள் வேலையை பொறுப்புடன் செய்யுங்கள். அடுத்தவர்களின் வேலையில் கவனம் செலுத்தாமல் உங்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள். நிதி சார்ந்த விஷயங்களில் கொடுக்கல் வாங்கலில் கவனமாகவும் ,நிதானமாகவும் செயல்படுங்கள். வருமானம் குறைய வாய்ப்புள்தால் சிக்கனமாக செலவு செய்யுங்கள். அத்தியாவசியவற்றிற்கு மட்டும் செலவு செய்யுங்கள். உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.