வாரம் 1 தடவ இதனை முறையாக செய்து வந்தா திருஷ்டி,பில்லி சூனியம் எதுவும் உங்கள் வீட்டு பக்கம் எட்டிக்கூட பாக்காது

First Published | Apr 9, 2023, 11:06 AM IST

கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை ஆற்றலை நம் வீட்டில் நெருங்க விடாமல் ஓட ஓட விரட்ட நம் முன்னோர்கள் செய்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.

நாம் தெருக்களில் செல்கையில் பலரது வீட்டு வாசல்களிலும் இரண்டு புறங்களிலும் எலுமிச்சைப் பலத்தை பாதியாக வெட்டி குங்குமம் வைத்து வைத்திருப்பதை பார்த்திருப்போம். இது கண் திருஷ்டியை போக்கும் சக்தியை கொண்டது என்று பலரும் நம்பிக்கையுடன் செய்து வருகின்றனர்.

 கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை ஆற்றலை நம் வீட்டில் நெருங்க விடாமல் ஓட ஓட விரட்ட நம் முன்னோர்கள் செய்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.


முன்பு இந்த எலுமிச்சை பழத்தை கிராமப்புறங்களில் தான் அதிகமாக பார்த்து இருப்போம். ஆனால் இன்று நகர்புறங்களில் கூட வீட்டு நிலை வாசல் கதவு க்கு அருகே எலுமிச்சை பழத்தை வெட்டி வைக்கிறார்கள். இப்படி வைக்கப்படும் எலுமிச்சை பழத்தினால் பல்வேறு விதமான நன்மைகள் ஏற்படும் என்று சாஸ்திரங்கள் கூறியுள்ளது.

அம்மன், ஹனுமன்,கருப்ப சாமி, எல்லை தெய்வங்களுக்கு என்று ஆன்மீகத்திலும் எலுமிச்சைப் பழம் பயன்படுத்தப்பட்டு வருவதால், இதில் பல்வேறு தெய்வீக சக்திகள் இருக்கின்றன.

அனைத்து விதமான விஷேசங்களிலும் எலுமிச்சை பழங்களை பயன்படுத்துவதை பார்த்து இருப்போம். இப்படியான எலுமிச்சை பழம் எத்தகைய எதிர்மறை ஆற்றல்களாக இருப்பினும் அதனை கிரகிக்கும் சக்தியை பெற்றுள்ளது.

எலுமிச்சை பலி :

எதிர்மறை ஆற்றல்கள் .துர் சக்திகள் போன்றவற்றை விரட்டியடிக்கும் ஆற்றல் இருப்பதால் தான் எலுமிச்சை பழத்தை பலியாக கொடுக்கிறார்கள். அதாவது புது வாகனங்கள் வாங்கி பூஜை செய்யும் போது, எலுமிச்சை பழத்தை பலியாக கொடுப்பதை பார்த்து இருப்போம். எலுமிச்சை பலிக்கு அடுத்து தான் அந்த புது வாகனத்தை ஓட்டுவார்கள் .

எங்கெங்கு பயன்படுத்துகிறார்கள்:

எலுமிச்சை பழத்தை வீடுகளில் மட்டுமல்லாமல் , அலுவலகம், தொழில் ஸ்தானங்களில் , வியாபாரம் செய்யும் இடங்களிலும் திருஷ்டிக்காக கட்டி விட்டிருப்பார்கள்.

நமது வீடுகளில் ஞாயிற்றுக் கிழமை மற்றும் அம்மாவாசை அன்று எலுமிச்சையை வைத்து திருஷ்டி சுற்றி போடுவார்கள்.
இப்படி திருஷ்டிக்காக அல்லது பூஜைக்காக பயன்படுத்தப்படும் எலுமிச்சைப் பழத்தை கரும் புள்ளிகள் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும்.

Tap to resize

எப்படி செய்வது:

இந்த எலுமிச்சைப் பழத்தை இரண்டு சரிபாதியாக வெட்டி விட வேண்டும். ஒரு பாதிப் பழத்தில் மஞ்சளும், மற்றொரு பாதியில் குங்குமமும் வைத்து வாசலின் வெளிப்பக்கத்தில் சென்று விட வேண்டும்.

இப்போது வலது பக்க வாசலில் குங்குமமும், இடது பக்கத்தில் குங்குமமும் மஞ்சளும் வைத்த எலுமிச்சை யை வைக்க வேண்டும். இப்படி வைப்பதால் வீட்டிற்கு எந்த விதமான தீய சக்திகளும் அண்டாது , ஏதேனும் இருப்பின் வீட்டு வாசலை தாண்டி நம் வீட்டிற்குள் நுழைய வாய்ப்பே இருக்காது.

அதோடு பில்லி, சூனியம், துர் தேவதைகளும், ஏவல் போன்ற செய்வினைகளும் இந்த எலுமிச்சையை பார்த்தால் பயந்து சென்று விடுமாம்.

என்னக் கிழமைகளில் செய்வது சிறப்பு :

ஒவ்வொரு செவ்வாய் அல்லது ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளில் இந்த பழத்தை மாற்றி விட வேண்டும். அதாவது வாரத்திற்கு ஒரு முறை இதனை மாற்றி வைக்க வேண்டும்.

இப்படி தொடர்ந்து எலுமிச்சை பழத்தை வீட்டு வாசலில் வைத்தால் அந்த குடும்பத்தில் இருப்பவர்களுக்கு எந்த விதமான பிரச்சனைகளும் ஏற்படாது, தவிர திருஷ்டிகள், காத்து கருப்பு நெருங்காமல் பாதுகாப்பாக இருக்கலாம் என்பது ஐதீகம் . தவிர நம் முன்னோர்களும் இதனை கடைபிடித்துள்ளனர்.

Latest Videos

click me!