Today Rasipalan 10th Apr 2023: சொத்து வாங்கணுமா விற்கணுமா உடனே செய்யுங்க..! ப்ரமோஷனுக்கு வாய்ப்பு

First Published | Apr 10, 2023, 5:30 AM IST

ஏப்ரல் 10ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம்.
 

மேஷம்:

குடும்ப பிரச்னையை தீர்ப்பதற்கு ஸ்பெஷலான ஆதரவு கிடைக்கும். உங்களுக்கு ஆர்வமான வேலையை பார்த்து மகிழ்வீர்கள். சொத்தை விற்கும் முயற்சி வெற்றிகரமாக நிறைவேறும். குடும்ப பிரச்னையை சுமூகமாக முடிக்கவும்.
 

ரிஷபம்:

இன்று உங்களது முழு ஆற்றல் மற்றும் நம்பிக்கையை உணர்வீர்கள். தொழிலில் நிறைய போட்டிகளும் சவால்களும் இருக்கும். எனவே வியூகம் வகுத்து செயல்படவும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும்.
 

Tap to resize

மிதுனம்:

சொத்து, வாகனம் வாங்கும் அல்லது விற்கும் திட்டம் இருந்தால் உடனே செயல்படுத்தவும். இப்போது நல்ல ஆதாயத்தை தரும். தொழில் கூட்டாளியிடம் வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்வது முக்கியம். அனுபவஸ்தர்களுடன் இணைந்து செயல்படுவது ஆதாயம் அளிக்கும்.
 

கடகம்:

வீட்டு பராமரிப்பு வேலைகளை ஒத்திவையுங்கள். இளைஞர்களுக்கு கெரியர் சார்ந்த பாசிட்டிவ் ரிசல்ட் கிடைக்கும். புதிய தொழில் தொடர்பான எந்த திட்டமும் இன்று தீட்டாதீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கு சாதகமான சூழல் நிலவும். 
 

சிம்மம்:

வீட்டிற்காக முக்கியமான பொருள் வாங்குவீர்கள். தொழில் ரீதியான பப்ளிக் டீலிங், மார்க்கெட்டிங் மீடியா ஆதாயம் தரும் சூழல் இருக்கிறது. குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். கணவன் - மனைவி உறவு நன்றாக இருக்கும்.
 

கன்னி:

இன்றைய தினம் முழுவதும் பிசியாக இருப்பீர்கள். குடும்ப பிரச்னைகளை தீர்க்க உங்கள் அறிவுரை முக்கியம். மாணவர்களின் கடின உழைப்பிற்கேற்ற ரிசல்ட் கிடைக்கும். கடின உழைப்பை குறைத்துக்கொள்ளாதீர்கள். தொழிலில் வெற்றி பெற்றவர்களிடமிருந்து ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் பெறவும்.
 

துலாம்:

வீட்டில் வாஸ்துவை சரிபார்க்கவும். எந்தவிதமான பெரிய பிரச்னையும் இப்போது தீரும். தொழிலில் முக்கியமான வேலை சரியான நேரத்தில் முடியும். வருமானம் அதிகரிக்கும். 
 

விருச்சிகம்:

வருமானத்திற்கான புதிய வழி கிடைக்கும். வீட்டு பெரியவர்களின் ஆசிர்வாதமும் அன்பும் கிடைக்கும். வேலை முறையில் சில மாற்றங்களை செய்யவும். தொழிலில் இழப்பு ஏற்படலாம். 
 

தனுசு:

தொழிலில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடாதீர்கள். அரசாங்க வேலையில் தடைகள் ஏற்படும். முக்கியமான வேலைகளை மதியத்திற்கு முன்பாகவே செய்து முடியுங்கள். 

மகரம்:

உங்கள் இலக்கில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; வெற்றி கிடைக்கும். பொருளாதார விஷயங்களில் சில பிரச்னைகள் ஏற்படலாம். புதிய முதலீடு செய்வதற்கு முன் நன்றாக ஆராய்ந்து முடிவு செய்யவும். பொருளாதார மந்தநிலை ஏற்படும். வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். 

கும்பம்:

அரசு சார்ந்த வேலைகள் இன்று முடிவுக்கு வரும். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். சகோதரர்களுடனான பிரச்னை இன்று முடியும்.. மீடியா, ஏற்றுமதி - இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு ப்ரமோஷன் கிடைக்கும். கணவன் - மனைவி உறவு இனிமையாக இருக்கும்.
 

மீனம்:

நண்பரின் மூலம் ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும். எனவே உங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்தவும். அரசு சார்ந்த வேலைகளை ஒத்திவைக்கவும். தொழில் தொடர்புகளை வலுப்படுத்தவும். பொழுதுபோக்கு, ஷாப்பிங்கில் நேரம் செலவழிப்பீர்கள்.
 

Latest Videos

click me!